இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 6 - 10 of 130 பாடல்கள்



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 6 - 10 of 130 பாடல்கள்

6. காலா காலங் கடந்திடு சோதியைக்
          கற்பனை கடந்த அற்புதத்தை
நூலாற் பெரியவர் சொன்னநுண் பொருளை
          நோக்கத்திற் காண்பது கோனாரே. 

விளக்கவுரை :

7. சொல்லருஞ் சகல நிட்கள மானதைச்
          சொல்லினாற் சொல்லாமல் கோனாரே
அல்லும் பகலு மகத்தி லிருந்திடிற்
          அந்தகன் கிட்டுமோ கோனாரே.

விளக்கவுரை :

8. சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடுந்
          தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
நாரியிடப்பாகன் தான்நெஞ்சிற்போற்றியே
          நற்கதி சேர்ந்திடும் கோனாரே.

விளக்கவுரை :

9. மும்மலம் நீக்கிட முப்பொறிக் கிட்டாத
          முப்பாழ் கிடந்ததா மப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை யமைத்துஞ்
          சிந்தையில் வைப்பீரே கோனாரே.

விளக்கவுரை :

10. பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
          பற்ற நின்றதைப் பற்றி யன்பாய்
நெஞ்சத் திருத்தி யிரவு பகலுமே
          நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே.

விளக்கவுரை :

இடைக்காட்டுச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள், idaikattu siththar, idaikattu siththar paadalkal, siththarkal