இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 106 - 110 of 130 பாடல்கள்



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 106 - 110 of 130 பாடல்கள்

106. அற்றவிடமொன்றே யற்றதோ டுற்றதைக்
       கற்றதென் றூதுகுழல் - கோனே
       கற்றதென் றூதுகுழல்.

விளக்கவுரை :

பால்கறத்தல்

107. சாவா திருந்திடப் பால்கற - சிரம்
          தன்னி லிருந்திடும் பால் கற
வேவா திருந்திடப் பால்கற - வெறும்
          வெட்ட வெளிக்குள்ளே பால்கற.  

விளக்கவுரை :
           
108. தோயா திருந்திடும் பால்கற - முனைத்
          தொல்லை வினையறப் பால்கற
வாயா லுமிழ்ந்திடும் பால்கற - வெறும்
          வயிறார வுண்டிடப் பால்கற.       

விளக்கவுரை :

109. நாறா திருந்திடும் பால்கற - நெடு
          நாளு மிருந்திடப் பால்கற  
மாறா தொழுகிடும் பால்கற - தலை
          மண்டையில் வளரும் பால்கற.   

விளக்கவுரை :

110. உலகம் வெறுத்திடும் பால்கற - மிக்க
          ஒக்காள மாகிய பால்கற
கலசத் தினுள்விழப் பால்கற - நிறை
          கண்டத்தி னுள்விழப் பால்கற.     

விளக்கவுரை :

இடைக்காட்டுச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள், idaikattu siththar, idaikattu siththar paadalkal, siththarkal