சட்டை முனி சித்தர் பாடல்கள் 6 - 10 of 200 பாடல்கள்
6. மூலமதி லாறுதலங் கீழே தள்ளி
முதிர்ந்துநின்ற மேலாறு மெடுத்து நோக்கிக்
கோலமுட னுன்மனையைத் தாண்டி யேறிக்
கொடியதொரு ஞானசக்திக் குள்ளே மைந்தா!
பாலமென்ற கேசரியாம் மவுனத் தூன்றிப்
பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றிக்
காலமொடு பிறப்பிறப்புங் கடந்து போகுங்
கைவிட்ட சூத்திரம்போல் சடமு மோங்கே.
விளக்கவுரை :
7. ஓங்கார முதற்கொண்டைந் தெழுத்தோ டாறும்
உற்றுநின்ற பஞ்சகர்த்தா ளிருந்தி டாறும்
ஆங்கார மாணவம்நா னெனலும் போனால்
அப்பவலோ அகாரமுத லுகாரங் காணும்
பாங்கான மகாரமொடு விந்துநாதம்
பரவியதன் மேல்நிற்கும் பராப ரந்தான்
வாங்கான மவுனத்தைப் பற்றி யேறு
மருவிநின்ற லகிரியைத்தா னொத்துக் காணே.
விளக்கவுரை :
8. ஒத்துநின்ற ஓங்காரம் மண்ணை யுண்ணும்
உருவியந்த மண்சென்று சலத்தை யுண்ணும்
பத்திநின்ற சலமதுதான் தீயை யுண்ணும்;
பாங்கான தீச்சென்று காலை யுண்ணும்;
வெத்திநின்ற கால்சென்று விண்ணை யுண்ணும்;
விழுந்ததப்பா சடமென வேதாந்தப் பேச்சு;
முத்திகண்டு கூடுவது மெந்தக் காலம்?
மூடரே மதுவையுண்டு மேல்பா ரீரே.
விளக்கவுரை :
9. பாரப்பா அகாரமுத லுகாரங் கொள்ளும்;
பாங்கான உகாரமது மகாரம் கொள்ளும்;
நேரப்பா மகாரமது விந்து கொள்ளும்;
நேரான விந்துவது நாதம் கொள்ளும்;
சேரப்பா நாதமுற்றுச் சத்தி கொள்ளும்;
சேர்ந்துநின்ற சத்தியல்லோ சிவத்தைக் கொள்ளும்;
ஆரப்பா சிவந்தன்னைப் பரந்தான் கொள்ளும்;
அப்பரத்தைக் கொண்டவிடம் அறிந்தே யுன்னே.
விளக்கவுரை :
10. உன்னிநின்ற மூலமுத லாறும் பார்த்தே
உருகிநின்ற சுழுமுனையை யறிந்த பின்பு
மன்னிநின்ற மதிமேல்சாம் பவியைக் கண்டு
மருவிநின்று மனமுறைந்து தேர்ந்த பின்பு,
பன்னிநின்ற இவ்வளவும் யோக மார்க்கம்;
பகலிரவு மற்றவிடம் ஞான மார்க்கம்;
கன்னிநின்ற விடங்கண்டா லவனே ஞானி
காட்டுவான் கேசரியைக் காட்டு வானே.
விளக்கவுரை :