அகப்பேய் சித்தர் பாடல்கள் 71 - 75 of 90 பாடல்கள்



அகப்பேய் சித்தர் பாடல்கள் 71 - 75 of 90 பாடல்கள்
           
71. மந்திர மில்லையடி                          அகப்பேய்
          வாதனை யில்லையடி
தந்திர மில்லையடி                               அகப்பேய்
          சமய மழிந்ததடி.

விளக்கவுரை :
           
72. பூசை பாசமடி                                 அகப்பேய்
          போதமே கொட்டமடி
ஈசன் மாயையடி                                  அகப்பேய்
          எல்லாமு மிப்படியே.

விளக்கவுரை :
           
73. சொல்ல லாகாதோ                         அகப்பேய்
          சொன்னாலும் தோஷமடி
இல்லை இல்லையடி                           அகப்பேய்
          ஏகாந்தங் கண்டாயே.

விளக்கவுரை :

74. தத்துவத் தெய்வமடி                        அகப்பேய்
          சதாசிவ மானதடி
மற்றுள்ள தெய்வமெல்லாம்                  அகப்பேய்
          மாயை வடிவாமே.

விளக்கவுரை :
           
75. வார்தை யல்லவடி                          அகப்பேய்
          வாச மகோசரத்தே
ஏற்ற தல்லவடி                                    அகப்பேய்
          என்னுடன் வந்ததல்ல.

விளக்கவுரை :

அகப்பேய் சித்தர், அகப்பேய் சித்தர் பாடல்கள், agapei siththar, agapei siththar paadalkal, siththarkal