கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு 31 - 35 of 35 பாடல்கள்


கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு 31 - 35 of 35 பாடல்கள்

31. பத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த
பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
சத்திய மென்றதை யீட்டி - நாளும்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி.

விளக்கவுரை :

32. செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம்.

விளக்கவுரை :

33. எவ்வகை யாகநன் னீதி - அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி.

விளக்கவுரை :

34. கள்ள வேடம் புனையாதே - பல
கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே.

விளக்கவுரை :

35. எங்கும் சுயபிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன்.

விளக்கவுரை :

(முடிந்தது)

கடுவெளிச் சித்தர், கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு, kaduveli siththar, kaduveli siththar aanandha kalippu, siththarkal