சட்டை முனி சித்தர் பாடல்கள் 81 - 85 of 200 பாடல்கள்
81. ஆமப்பா ஆசைவிடக் கருவைச் சொல்வேன்
அறிந்துகொண்டே அறிவாலே நின்று பாரு;
சேமப்பா திரோதாயி யாரென் றக்கால்
செகமெலாம் பெண்ணான வுருத்தா னப்பா!
ஓமப்பா பொன்மண்வா சனையி னாசை
ஒற்றிநின்ற விந்திரிய மயக்கத் தாசை
நாமப்பா வென்றுசொன்ன ஆண்மை யாசை
நல்வினைக்குந் தீவினைக்கும் வித்து மாச்சே.
விளக்கவுரை :
82. வித்துக்குள் பாவமென்ன புண்ய மென்ன
வெகுகோடி புண்ணியத்தால் புருட சன்மம்
புத்துக்குள் வெகுகோடி பாவ புண்யம்
பாழான பெண்செனன மெடுத்த வாறு
கொத்துக்கு ளிவையறிந்து பாவ மான
குழிக்குள்ளே வீழ்ந்தாரே கோடி யையோ!
எத்துக்கு ளிவையறிந்து வேறாய் நின்றே
இகழ்ந்தவனே மெய்ஞ்ஞான வீச னாமே.
விளக்கவுரை :
83. பூரணமே யகண்டமே யகத்தி னந்தம்
பொங்கிநின்ற நிர்க்குணமே யென்னை யீன்ற
காரணமே யலகிற்பெண் ணாசை போலக்
கலந்துநின்ற சுகமில்லை கருதிக் கொண்டேன்.
ஆரணமே யதீதத்தில் சுகந்தா னென்ன
அப்பவே சொல்லுகிறே னறிந்து கொள்ளு;
காரணமாங் குவிமுலையா ளாசை விட்டால்
மகத்தான மூவுலகும் விடுக்கும் நேரே.
விளக்கவுரை :
84. நேரான பெண்ணாசை நீங்கிற் றானால்
நிலையான திரோதாயி மாய்கை போச்சு
தூரான வேதாந்த வெளியிற் சொல்வார்
சும்மென்ற சகஞ்சொல்வா யோகி யல்லை
வாராய்நீ யென்மகனே பெண்ணாற் சிக்கி
மகத்தான ரிடிகள்சித்தர் கோடி கெட்டார்;
தாரான சித்தரோடு பஞ்ச கர்த்தாள்
தயங்கி நின்று படும்பாடு சாற்று வேனே.
விளக்கவுரை :
85. சாற்றுவேன் வீதிபடு குழிதா னுண்டு
தன்மேலே புல்லோடு செடியு மூடி
மாற்றுவேன் வீதியிலே நடந்தோன் வீழ்ந்த
வாறொக்கும் பெண்ணான மாயக்கூபம்
ஆற்றுவே னென்றாலு மாற்றப் போகா
அரகரா பெண்ணரவு கடித்த தானால்
போற்றுவே னென்றாலும் பொல்லாக் காமம்
பொறிவிட்ட நெய்போலப் பொங்கும் பாரே.
விளக்கவுரை :