சட்டை முனி சித்தர் பாடல்கள் 51 - 55 of 200 பாடல்கள்



சட்டை முனி சித்தர் பாடல்கள்  51 - 55 of 200 பாடல்கள்

51. சத்தியுள்ள வாசனையாங் குரங்கு கேளு
          தாண்டியல்லோ இந்திரியக் கொம்புக் குள்ளே
பத்தியுள்ளே யலைத்தடித்துப் பேய்க்கூத் தாக்கிப்
          பாங்கான மனத்தையல்லோ சின்னம் பண்ணி
முத்தியுள்ள வாசலுக்கே யேறொட் டாது
          முழுமோசச் சனியனப்பா ஞானத் துக்குக்
கொத்தியுள்ள வாசனையை யடக்கிப் பார்த்தால்
          குருடனுக்கும் ஞானவழி கூடுங்காணே.

விளக்கவுரை :

52. கூடுவதும் எப்படியோ ஞான மூர்த்தி!
          குரங்கைவிட்டே அகலுகிற வழியைச் சொல்க;
நாடுவது முலகத்து வாதம் வந்தால்
          நன்மனமுண் டானால்சாத் திரத்திற் சொல்வார்
ஊடுவது சாதுசங்கம் வேதாந் தம்பார்
          உத்தமனே வாசனையாங் குரங்கு போகும்;
ஆடுவது தொய்தவா சனையி லேற்றும்
          அப்படியே யுலகத்தி லனேகம் பேரே.

விளக்கவுரை :

53. பேரான வுலகத்தில் ஞான முற்றும்
          பேசாம லருகிருந்த விடத்தில் மைந்தா!
வாரான மோதத்தி லிங்க மாகும்
          வாதிக்கு மேருவுக்கும் நடுவே கோடி
காரான காமத்தால் பாண்டி லிங்கம்
          கைவிட்ட சமாதியினால் சுந்தர லிங்கந்
தாரான மலைதோறும் பூமி தோறுஞ்
          சாற்றரிது சாற்றரிது சார்ந்து பாரே.

விளக்கவுரை :

54. பாரப்பா சுயம்பில்வந்து பிட்சை யேற்றால்
          பலித்ததப்பா ஞானசித்தி மவுன சித்தி;    
நேரப்பா வொன்பது பேரிவரு ளாறு
          நிகராகப் பெலிகொண்டோர் நீடு மூவர்
காரப்பா விண்ணையென்றால் சாவார் கர்த்தார்
          காத்தாலே ஞானசித்தி கலந்து கூடும்;
ஊரப்பா வாதியைப்போல் நீங்கள் கெட்ட
          உலுத்தரென்பார் சித்தர்கள்தா முரைத்தி டீரே.

விளக்கவுரை :

55. உரைக்கவல்லோ ராசயோகம் வைத்தா னீசன்?
          உண்டுடுத்துத் திரிவதற்கோ சொன்னா னையன்?
மறைக்கவா சனைலகிரி கொள்ளு மென்றான்
          மகத்தான தெட்சணா மூர்த்தி யாசான்
நிறைக்கவல்லோ யோகமுதல் ஞானஞ் சொன்னான்
          நிற்கவிட மற்றநிர் மலமாஞ் சோதி
இறைக்கவல்லோ வூறினதோர் கேணி யைப்போல்
          எடுக்கெடுக்க வெழும்பும்வா சனைதான் காணே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal