பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் 111 - 115 of 129 பாடல்கள்



பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் 111 - 115 of 129 பாடல்கள்

111. இறந்தவர் ஐவரவர் இட்ட மானவர்
எய்தும்அவ ரிறந்தாரென் றெல்ல வார்க்குஞ்சொல்
மறந்தவர் ஒருவரென்றே மண்ணினி லுள்ளோர்
வகையறிந் திடவேநின் றாடாய் பாம்பே. 

விளக்கவுரை :

எண்சீர் விருத்தம்

112. ஆகார முதலிலே பாம்ப தாக
          ஆனந்த வயலிலே படம் விரித்தே
ஊகார முதலிலே யொத்தொ டுங்கி
          ஓடி வகாரத்தி னாவை நீட்டிச்
சீகாரங் கிடந்ததோர் மந்திரத் தைச்
          சித்தப்பி டாரனார் போதஞ் செய்ய
மாகாரப் பிறப்பையும் வேர றுத்து
          மாயபந்தங் கடந்தோமென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

113. தந்திரஞ் சொல்லுவார் தம்மை யறிவார்
          தனிமந்தி ரஞ்சொல்லுவார் பொருளை யறியார்
மந்திரஞ் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்
          மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்.
அந்தரஞ் சென்றுமே வேர்பி டுங்கி
          அருளென்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே
இந்த மருந்தினைத் தின்பீ ராகில்
          இனிப்பிறப் பில்லையென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

114. களிமண்ணி னாலொரு கப்பல் சேர்த்தே
          கனமான பாய்மரங் காண நாட்டி
அளிபுலந் தன்னையே சுக்கா னாக்கி
          அறிவென்னு மாதாரச் சீனி தூக்கி
வெளியென்னும் வட்டத்தே யுள்ள டக்கி
          வேதாந்தக் கடலினை வெல்ல வோட்டித்
தெளிவுறு ஞானியா ரோட்டுங் கப்பல்
          சீர்பாதஞ் சேர்ந்ததென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

115. உள்ளத்துக் குள்ளே யுணர வேண்டும்
          உள்ளும் புறம்பையு மறிய வேண்டும்
மெள்ளக் கனலை யெழுப்ப வேண்டும்
          வீதிப் புனலிலே செலுத்த வேண்டும்
கள்ளப் புலனைக் கடிந்து விட்டுக்
          கண்ணுக்கு மூக்குமேற் காண நின்று
தெள்ளு பரஞ்சோதி தன்னைத் தேடிச்
          சீர்பாதம் கண்டோமென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

பாம்பாட்டிச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள், pampaatti siththar, pampaatti siththar paadalkal, siththarkal