சட்டை முனி சித்தர் பாடல்கள் 61 - 65 of 200 பாடல்கள்



சட்டை முனி சித்தர் பாடல்கள்  61 - 65 of 200 பாடல்கள்

61. அழையுமென்ற சொற்கேட்டுச் சுந்த ரானந்
          தன்கணத்திற் கொங்கணரை யதிசீக் கிரத்தில்
விழைவுடனே யோடிவந்து தெண்ட னிட்டு
          விரைவுடனே கொங்கணர்தா னிக்க ணத்தில்
அழையுமென்றா ரெங்களைய ருங்க ளைத்தான்
          ஆச்சரியஞ் சொல்லுதற்கே யடியேன் வந்தேன்
அழையுமென்ற சீடனுக்குப் பின்னே வந்தே
          அடியேன்தான் வந்ததென்று பணிந்திட் டாரே.

விளக்கவுரை :

62. பணிந்திட்ட கொங்கணரை வாரி மோந்து
          பராபரமே நிர்க்குணமே பண்புள் ளோனே!
அணிந்திட்ட அறுவரையிற் சொக்கிச் சென்ற
          ஆதியென்ற பராபரமே யையா வையா!
மணியிட்ட சிலம்பொலியைக் கேட்ட மூர்த்தி
          மார்க்கத்தை யெப்படித்தா னேறி னீரோ
கணியிட்ட நிர்மலா மனத்தி னாலே
          கைலாய தேகமென்ன தங்க மாச்சு.

விளக்கவுரை :

63. ஆச்சப்பா அப்படியே வரணு மென்றே
          ஆசைகொண்டே யிருக்கவழைத் தனுப்பு வித்தீர்;
வாச்சப்பா மனுவொன்ற வடியே னுக்கு
          மைந்தன்மேல் கடாட்சத்தால் சொல்லவேணும்
ஓச்சப்பா கொங்கணரே யுபசார மென்ன
          ஓங்கினதை யுரைக்கின்றேன் கேளு கேளு;
காச்சப்பா வுலகத்தி லெடுத்த தேகம்
          கைலாயச் சட்டையாங் கருவைச் சொல்லே;

விளக்கவுரை :

64. கருவென்ன வொன்றுமில்லை மேரு நேரே
          காணப்பா வீசானங் கைலா யமாச்சே;
உருவென்ன வெடுத்துகை லாய தேகம்
          உத்தமனே நிராகார ஞான சித்தி
குருவென்ன நிர்க்குணத்தின் மவுனத் துள்ளே
          குவிந்துரைத்த பெருமையின் கைலாய மாச்சே;
அருவென்ன மகாரவித்தை முட்டிக்கொண்டு
          ஆதிவிர்த்த கற்பமது வுண்டு பாரே.

விளக்கவுரை :

65. பாரப்பா சூதமுண்டு மவுனந் தாக்கப்
          பளிச்சென்ற ஏழுசட்டை பண்ணாய்ப் போதும்
நேரப்பா அச்சடங்கை லாய தேகம்
          நிமிடத்தே சித்தியாமுன் னினைவுக் கையா
ஆரப்பா வுனைப்போல நினைத்த பண்ணல்
          அரிதரிது கூடாகி மூடர் பேரால்
சேரப்பா சொல்லிவிட் டேனென்ற பேச்சுச்
          செப்புமுன்னே கைலாய முற்றுப் பாரே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal