அகப்பேய் சித்தர் பாடல்கள் 51 - 55 of 90 பாடல்கள்
51. பரத்தில் சென்றாலும் அகப்பேய்
பாரிலே மீளுமடி
பரத்துக் கடுத்தவிடம் அகப்பேய்
பாழது கண்டாயே.
விளக்கவுரை :
52. பஞ்ச முகமேது அகப்பேய்
பஞ்சு படுத்தாலே
குஞ்சித பாதமடி அகப்பேய்
குருபாதங் கண்டாயே.
விளக்கவுரை :
53. பங்க மில்லையடி அகப்பேய்
பாத மிருந்தவிடம்
கங்கையில் வந்ததெல்லாம் அகப்பேய்
கண்டு தெளிவாயே.
விளக்கவுரை :
54. தானது நின்றவிடம் அகப்பேய்
சைவங் கண்டாயே
ஊனற நின்றவர்க்கே அகப்பேய்
ஊனமொன் றில்லையடி.
விளக்கவுரை :
55. சைவம் ஆருக்கடி அகப்பேய்
தன்னை யறிந்தவர்க்கே
சைவ மானவிடம் அகப்பேய்
சற்குரு பாதமடி.
விளக்கவுரை :