குதம்பைச் சித்தர் பாடல்கள் 26 - 32 of 32 பாடல்கள்


குதம்பைச் சித்தர் பாடல்கள் 26 - 32 of 32 பாடல்கள்

26. காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி ?

விளக்கவுரை :

27. வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ?

விளக்கவுரை :

28. மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?

விளக்கவுரை :

29. பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாக்கு ஏதுக்கடி ?

விளக்கவுரை :

30. தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி ?

விளக்கவுரை :

31. தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
பின்னாசை ஏதுக்கடி ?

விளக்கவுரை :

32. பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி ?

விளக்கவுரை :

(முடிந்தது)

குதம்பைச் சித்தர், குதம்பைச் சித்தர் பாடல்கள், kudhambai siththar, kudhambai siththar paadalkal, siththarkal