சட்டை முனி சித்தர் பாடல்கள் 66 - 70 of 200 பாடல்கள்
66. உற்றுநின்ற பலநூலைப் பார்த்துப் பார்த்தே
உரையாவே தாந்தசித் தாந்த மென்று
பற்றிநின்ற பரவசத்தா னென்றே உன்னிப்
பாராம லலைந்துகெட்டா ரனந்தங் கோடி:
முற்றிநின்ற விடமெங்கே ஞான மெங்கே?
(. . . . .
. . . . . . . . . .)
கொற்றி நின்ற மேல்மூலத் துரிய மெங்கே?
கூடுவார் மெய்ஞ்ஞானக் குரைவி தாமே.
விளக்கவுரை :
67. குறைவேது வாசனையாந் தொய்தத் தோடு
கூடவல்லோ மெய்ஞ்ஞானம் புனைந்து நிற்கும்;
மறைவேது மறையதனின் அந்த மேது?
மறைவற்று நின்றதொரு வெளியங் கேது?
துறையேது துறைக்குள்ளே சோதி யேது?
சூட்டியிருந்த விவரமெல்லாம் ஞானந் தோற்றும்
அறையேது? அல்லவென்று சமுசா ரத்துள்
அழுத்துமப்பா தொய்தத்தி னாண்மை தானே.
விளக்கவுரை :
68. ஆண்மையென்றால் தொய்தத்தி ணாண்மை யல்லோ
அகண்டமுத லண்டமெல்லாம் ஞானந் தோற்றும்
மாண்மையென்றால் வாய்ப்பேச்சாம் ஞானி வாயில்
மண்ணையள்ளிக் கூறுகொண்டு மலங்கப் பார்த்துக்
கேண்மைகொண்டே யுககெல்லாங் கெடுத்தே ஆட்டிக்
கெடியான பெண்ணுபொன் னாணி னாலே
தான்மையென்ற பிறப்பிறப்பை மீறப் பாய்ந்து
சண்டாளக் கோபத்தைத் தள்ளு தள்ளு.
விளக்கவுரை :
69. தள்ளுகின்ற வுறுப்பு வந்தால் கருவைக் கேளு;
சாதகமாய்க் குண்டலிக்குள் வாசி வைத்துத்
தெள்ளுகிற பிராணாயம் பண்ணித் தீருந்
திரண்டொலியுஞ் சிலம்பொலியுங் காணும் காணும்;
நள்ளுகின்ற கண்டத்தே யங்கென் றூணும்
நலம்பெரிய புருவமையந் திறந்து போகும்
அள்ளுகின்ற கனிபோலே யமிர்தம் வீழும்
அப்பொழுது காயசித்தி யறிந்து கொள்ளே.
விளக்கவுரை :
70. அறிந்திந்த மதியான விந்து விட்டும்
அப்பனே யோகமிதே யறிந்து கொள்ளு;
பரிந்திந்த விந்துமுதல் நாதஞ் சித்தி
பாங்கான சிவத்தோடு பரந்தான் கேளு;
அறிந்திந்தப் பராபரத்தோ டாறுகேளு
அப்பனே மவுனத்தைத் தூக்கிக் கொண்டால்
செறிந்து நின்ற ஞானத்தின் யோக மாச்சு;
செயல்தம்ப மவுனத்தைச் சென்று காணே.
விளக்கவுரை :