இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 31 - 35 of 130 பாடல்கள்



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 31 - 35 of 130 பாடல்கள்

31. வாக்காதி யைந்தையும் வாகாய்த் தெரிந்தேனே
          மாயைசம் பந்தங்க ளைந்தும் பிரிந்தேனே
நோக்கரும் யோகங்க ளைந்தும் புரிந்தேனே
          நுவலும்மற் றைந்தியோக நோக்கம் பரிந்தேனே.    (தாந்)

விளக்கவுரை :

32. ஆறா தாரத்தெய் வங்களை நாடு
          அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு
கூறான வட்டவா னந்தத்திற் கூடு
          கோசமைந் துங்கண்டு குன்றேறி யாடு.    (தாந்)

விளக்கவுரை :

நாராயணக்கோன் கூறுதல்

33. ஆதி பகவனையே                           பசுவே
          அன்பாய் நினைப்பாயேல்
சோதி பரகதிதான்                                 பசுவே
          சொந்தம தாகாதோ.

விளக்கவுரை :

34. எங்கும் நிறைப்பொருளைப்              பசுவே
          எண்ணிப் பணிவாயேல்
தங்கும் பரகதியில்                                பசுவே
          சந்ததஞ் சாருவையே.

விளக்கவுரை :

35. அல்லும் பகலும் நிதம்                     பசுவே
          ஆதி பதந்தேடில்     
புல்லு மோட்சநிலை                              பசுவே
          பூரணங் காண்பாயே.

விளக்கவுரை :

இடைக்காட்டுச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள், idaikattu siththar, idaikattu siththar paadalkal, siththarkal