சட்டை முனி சித்தர் பாடல்கள் 71 - 75 of 200 பாடல்கள்
71. காணப்பா பராபரத்தின் மேலே யாறு
கைவிட்ட அகண்ட முநிர்க் குணத்தா னொன்று
பூணப்பா நிர்க்குணந்தான் நிராகா ரந்தான்
புகழான நிர்மலந்தான் போதத் தந்தம்
தோணப்பா விவையாறுங் காணப் போகச்
சொல்லுகிற வார்த்தையென்றால் கேட்டி ருப்போம்
ஊணப்பா சடம்விட்டே அறிவு விட்டே
உற்று நின்ற அண்டத்தே யறித்து கொள்ளே.
விளக்கவுரை :
72. அறிந்து கொள்ளு மதியளவு பிண்டத் துள்ளே
அப்பனே யாறுதலம் அறிந்து காணும்;
அறிந்து கொள்ளு விந்துவின்மேல் பரத்தின் மட்டும்
அறிவுக்குள் சக்கரந்தா னப்பா கேளு;
அறிந்து கொள்ளு பரத்தின் மேல் போத மட்டும்
ஆதார நிர்மலத்தின் வரைக ளாறும்
அறிந்துகொள்ளு மேலாறுங் காணப் போகா
ஆச்சரியம் கொங்கணரை விட்டுக் காணே.
விளக்கவுரை :
73. காணப்பா தசதீட்சை கடந்த பின்பு
கைவிட்ட சூத்திரத்தை யாசான் காட்ட
ஊணப்பா அது மவுனம் மற்ற தெல்லாம்
உரவார்த்தை அகாரமுத லுகாரமென்பார்
வீணப்பா சிரமேல்வே தாந்தக் காட்சி
விரைந்ததிலே யும்மென்றே ஊணென் பார்கள்
பூணப்பா வும்மென்ற நாத மாமோ
போக்கறியான் சொல்லுகிற ஞானந் தானே?
விளக்கவுரை :
74. தானென்ற விடங்காட்டி நாதங் காட்டிச்
சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி
வானென்ற வெளியோடறு தலமுங் காட்டி
வாய்மூடி னாதிக்க வகையும் காட்டி
ஊனென்ற வுடம்பைவிட்டுக் கேசரியுங் காட்டி
ஊமைநின்ற விடங்காட்டி யுரைக்கப் பண்ணிக்
கோனென்ற குருவெனும் வாய் பேசலாமோ
குறும்பரே குருசொல்ல விரண்டு மாமே.
விளக்கவுரை :
75. ஆமிந்த வுலகத்தோர் ஞான வீதி
அறிந்தேறிக் கூடுவதும் அரிது மெத்த
ஓமிந்தக் குண்டலியைத் தொட்ட ரற்ற
ஊதுவது கடினமெத்த யோக மார்க்கம்
வாமிந்த வாமத்தே நின்று கொண்டு
மகத்தான பானமுண்ண வாய்க்கும் ரண்டும்
சோமிந்தச் சடைவைத்துச் சின்மயம் காட்டும்
சொற்பெரிய பூரணந்தான் சொன்ன வாறே.
விளக்கவுரை :