சட்டை முனி சித்தர் பாடல்கள் 36 - 40 of 200 பாடல்கள்



சட்டை முனி சித்தர் பாடல்கள்  36 - 40 of 200 பாடல்கள்

36. பாம்பையல்லோ ஆபரணம் பூண்ட ஈசன்
          பரிவாக மதியோடு கொன்றை சூடிப்
பாம்பையல்லோ முந்நூலாய்ப் போட்ட கூத்தன்
          பாங்கான கரியுரித்த பாணி பாணி
பாம்பையல்லோ கங்கணமாய்த் தரித்துக் கொண்டு
          பரியுழுவைத் தோலுடுத்துப் பாதந் தூக்கிப்
பாம்பையல்லோ மனைக்குமோ திரமாய்ப் போட்டு
          பாரென்றே அகண்டத்தி லாடி னாரே.

விளக்கவுரை :

37. ஆடினதோர் கூத்தெல்லா மாத்தாள் மெச்சி
          அண்டையிலே யழைத்தானை யிருத்திக் கொண்டாள்
நாடினதோ ரவளருகி லரனு மெய்வான்
          நாமறியோ மவனவளு மொன்றே யொன்றே
ஊடினதோ ரிடமெங்கே? ஒலிகேட் பெங்கே?
          ஒன்றாகக் காணுகிற நடன மெங்கே?
கூடினதோ ரகண்டத்தின் சோதி யெங்கே?
          கூசாமல் மவுனத்திற் கூடிக் காணே.

விளக்கவுரை :

மெய்ஞ்ஞான குரு

38. காணப்பா மகாரவரை நாத வோசை
          கன்னிக்குப் பீடமடா மவுன ஞானம்
ஊணப்பா வூணப்பா நாதத் தோடே
          ஒருமுனையா யொருவழியா யொன்றா யோடும்         
தோணப்பா தோற்றுவதங் கொன்று மில்லை
          சுத்தவெளி ரவிகோடி சூழவன்னி
ஆணப்பா மாகோடி கண்கொள் ளாதே
          ஆச்சரிய மதிகமென்ற மகாரங் காணே.

விளக்கவுரை :

39. மகாரமல் லோமுந்தி யாசான் சுட்டி
          வழிகாட்டு முறைமையது ஞான மார்க்கம்
மகாரமல்லோ அடங்கியந்த நாதந் தாண்டி
          மருவிநின்ற இடமல்லோ கேசரி மைந்தா
மகாரமென்ன மெலெழுத்தே யென்பார் மாண்பார்
          மாட்டுவதை முன்றெழுத்த தென்று காணார்
மகாரமென்ன மகாரவித்தை யதீத வித்தை
          வாய்திறந்து பேசாதே மௌன மாமே.

விளக்கவுரை :

40. மௌனவித்தை யாதெனில்மூன் றெழுத்தே யென்பார்
          மாட்டுகிற இனங்காணார் மார்க்கங் காணார்
மௌனவித்தை யாவதென் வாய்மூட வென்பார்
          மாடுமுதற் குதிரையினா லாவ தென்ன?
மௌனவித்தை கேட்டார்கூட் டுறவு காணார்
          வாய்மூடி வழியோடே நாதங் கேளார்
மௌனவித்தை யாசான்றான் தூண்டிக் காட்டில்
          மணிமுதலாய்த் திசைநாதங் கேட்குந் தானே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal