உரோம ரிஷி சித்தர் ஞானம் 1 - 5 of 13 பாடல்கள்
எண்சீர் விருத்தம்
1. மூலவட்ட மானகுரு பாதங் காப்பு;
முத்திக்கு வித்தான முதலே காப்பு;
மேலவட்ட மானபரப் பிரமங் காப்பு!
வேதாந்தங் கடந்துநின்ற மெய்யே காப்பு;
காலவட்டந் தங்கிமதி யமுதப் பாலைக்
கண்டுபசி யாற்றிமனக் கவடு நீக்கி
ஞாலவட்டஞ் சித்தாடும் பெரியோர் பாதம்
நம்பினதா லுரோம னென்பேர் நாயன் றானே.
விளக்கவுரை :
2. கண்ணாடி சிலமூடித் தனுப்பி னாலே
கருவதனை யறியாமல் மாண்டு போனான்
விண்ணாடிப் பாராத குற்றம் குற்றம்
வெறுமண்ணாய்ப் போச்சுதவன் வித்தை யெல்லாம்;
ஒண்ணான மவுனமென்றே யோகம் விட்டால்
ஒருபோதுஞ் சித்தியில்லை! வாதந் தானும்
பெண்ணார்தம் ஆசைதன்னை விட்டு வந்தால்
பேரின்ப முத்திவழி பேசுவேனே.
விளக்கவுரை :
3. பேசுவேன் இடைகலையே சந்த்ர காந்தம்;
பின்கலைதா னாதித்தனாதி யாச்சு;
நேசமதாய் நடுவிருந்த சுடர்தான் நீங்கி
நீங்காம லொன்றானா லதுதான் முத்தி;
காதலாய்ப் பார்த்தோர்க்கிங் கிதுதான் மோட்சம்;
காணாத பேர்க்கென்ன காம தேகஞ்
சோதனையாய் இடைகலையி லேற வாங்கிச்
சுழுமுனையில் கும்பித்துச் சொக்கு வீரே.
விளக்கவுரை :
4. வாங்கியந்தப் பன்னிரண்டி னுள்ளே ரேசி
வன்னிநின்ற விடுமல்லோ சூர்யன் வாழ்க்கை?
ஓங்கியிந்த இரண்டிடமு மறிந்தோன் யோகி;
உற்றபர மடிதானே பதினாறாகும்;
தாங்கிநின்ற காலடிதான் பன்னி ரண்டு;
சார்வான பதினாறில் மெள்ள வாங்கி
ஏங்கினதைப் பன்னிரண்டில் நிறுத்தி யூதி
எழுந்தபுரி யட்டமடங் கிற்றுப் பாரே.
விளக்கவுரை :
5. பாரையா குதிரைமட்டம் பாய்ச்சல் போச்சு
பரப்பிலே விடுக்காதே சத்தந் தன்னை;
நேரையா இரண்டிதழி னடுவே வைத்து
நிறைந்தசதா சிவனாரைத் தியானம் பண்ணு;
கூரையா அங்குலந்தா னாலுஞ் சென்றால்
குறிக்குள்ளே தானடக்கிக் கொண்ட தையா!
ஆரையா உனக்கீடு சொல்லப் போறேன்
அருமையுள்ள என்மகனென் றழைக்க லாமே.
விளக்கவுரை :