சட்டை முனி சித்தர் பாடல்கள் 11 - 15 of 200 பாடல்கள்



சட்டை முனி சித்தர் பாடல்கள்  11 - 15 of 200 பாடல்கள்

11. காட்டுவான் கிரியுன்னை மேலே யேற்றிக்
          கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்வாள்
மூட்டுவாள் குளிகைவிட்டால் கணத்துக் குள்ளே
          மூதண்ட புவிகடந்து தெளிவுங் காணும்
ஆட்டுவா ளண்டரண்ட மாலை பூண்டாள்
          ஆதிவத்து அனாதிவத்து இரண்டு மொன்றே
ஊட்டுவாள் நிர்க்குணத்தி னமிர்தவல்லி
          உயர்ந்துநின்ற ஞானசத்தி யுறவு தானே.

விளக்கவுரை :

12. உறவென்னத் தாறைவிட வுறவு முண்டோ?
          உலுத்தரையோ வாமத்தைத் தூடிப் பார்கள்
குறைவென்ன திரோதாயி சமயந் தோறுங்
          கூடியல்லோ மாயவலை கூட்டி யாட்டி
மறவென்ன ஞானமென்ன மங்கித் தள்ளி
          மகத்தான சமுசார வலையிற் போட்டாள்
நிறவென்ன வாமத்தால் ஞான மாச்சு
          நின்றவனே சிவயோகி வாசி பாரே.

விளக்கவுரை :

13. வாசியென்றும் மவுனமென்றும் இரண்டும் வித்தை
          மகத்தான சாம்பவிகே சரியும் ரண்டு
தேசி யென்றால் யோகத்துக் காதி வித்தை
          திறமான மவுனமென்றால் ஞான வித்தை
மாசியென்ற மனமுடைத்தா லிரண்டு மாகா;
          மருவுநின்றே அறிவறிந்தா லிரண்டு மாகும்;
தூசியென்ற வெளியல்லோ அண்ட வீதி
          சொக்காமல் கிரிகொண்டே ஆக்கி யேறே.

விளக்கவுரை :

14. ஆக்கிநின்ற பரிசத்தால் கொசுவி றந்த
          தாச்சரியம் ரூபத்தில் வண்டி றந்த
பாக்கிநின்ற மணியொலியால் மானி றந்த
          பாழான வுரிசையினால் மீனி றந்த
தாக்கிநின்ற கெந்தியினா லெறும்பு சென்று
          சாதகமாய் மாண்டதிந்த ஐந்தும் பாரு;    
பாக்கிநின்ற இந்திரிய விடயத் துள்ளே
          பாழான மனஞ்சிக்கிப் படுகு வாரே.

விளக்கவுரை :

15. வாரான வுலகத்தில் மனிதர் கோடி
          மருவிநின்றே யுண்டுடுத்துச் சையோ கித்துத்
தாரான கசதுரக ரதங்க ளேறிச்
          சகலரத்ன பூடணங்கள் தரித்து விம்மி
மாரான வாழ்வடைந்தோர் இறந்தா ரையா!
          மாண்டவர்கள் வெகுகோடி மாய வாழ்க்கை
கூரான சிவபோக ஞானம் வந்தால்
          கூடழிந்து போகாது கூடு கூடே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal