சட்டை முனி சித்தர் பாடல்கள் 41 - 45 of 200 பாடல்கள்



சட்டை முனி சித்தர் பாடல்கள்  41 - 45 of 200 பாடல்கள்

41. கேட்கையிலே மதியினிட மமிர்தஞ் சிந்துங்
          கெடியான துவாசமுர்தங் கடந்து தோன்றும்
வாழ்க்கையிலே யாசையறும் நினைவும் போகும்
          வாரிதிபோ லண்ணாக்கி லமிர்த மோடும்
தாக்கையிலே ரவிகோடி காந்தி காணும்
          சச்சிதா னந்தவொளி தானே தோன்றும்
மூட்கையிலே மேலமிர்த லகரி மீறும்
          மூன்றுகமும் கணமாகு மூட்டிப் பாரே.

விளக்கவுரை :

42. மூட்டையிலே யுலககிரி கொண்டு மூட்டு
          முதிர்ந்தபின்பு விண்ணுள்கிரி வந்து காக்கும்
கூட்டையிலே மகாரத்தை யறிந்து கூட்டும்
          கும்மென்ற நாதத்தில் கூடி யேறும்         
மாட்டையிலே யறிவோடு மனத்தை மாட்டும்
          மறுகாலும் நாதத்தைக் கூர்ந்து கேளே
ஓட்டையிலே யொருவழியா யோடிற் றானால்
          உத்தமனே யச்சின்ன முத்தி யையா!

விளக்கவுரை :

ஏறுகிற துறை

43. ஐயனே! குருவான அகண்ட மூர்த்தி!
          அதிதமென்ற ஞானமெல்லாம் அருளிச் செய்தாய்;
மெய்யனே! ஏறுகிற சாதகஞ் சொல்
          வேதாந்த லட்சியத்தை விளங்கச் சொல்லு
துய்யனே! நிலைதோறு மெழுத்தைச் சொல்லு
          சொற்பெரிய பிராணாய சூட்சஞ் சொல்லு
தையனே! தையமென்ற நிர்த்தஞ் சொல்லு
          சாதகமாய் லட்சயத்தைச் சாற்றி டாயே.

விளக்கவுரை :

44. சாற்றிடென்று கேட்டமா ணாக்க னேகேள்;
          சந்தோட மாச்சுதிப்போ சார்பு சொல்வேன்;
ஏற்றமென்ற மூலத்தில் வாசி வைத்தே
          எளிதாகப் பிராணாயம் பண்ணித் தேறி
ஆற்றுமென்ற குண்டலிக்குள் நடனங் கண்டால்
          ஆதித்தன் கோடியைப்போல் காந்தி காணும்
மாற்றுமென்ற கண்டத்தி லங்கென் றூணு
          வாய்திறக்க வொட்டாது வழிசெய் வாயே.

விளக்கவுரை :

45. வழியோடே நின்றுரைத்துப் பழக்க மாகி
          மனோன் மணியாம் புருவமையத் தூடேசென்றே
ஒளியோடே மவுனத்தை யோட்டி யூதாய்;
          உத்தமனே! சாம்பவியைக் கண்டு கொள்வாய்
நெளிவோபோ யிவ்வளவும் யோக மார்க்கம்
          நின்றவனே சிவயோகி நினைவாய்க் கேளு;
தெளிவோடே விந்துவென்ற குரு பதத்தில்
          தேக்கப்பா மவுனத்தைத் தாரை யாமே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal