சட்டை முனி சித்தர் பாடல்கள் 91 - 95 of 200 பாடல்கள்



சட்டை முனி சித்தர் பாடல்கள்  91 - 95 of 200 பாடல்கள்

91. ஆடையிலே விண்ணுக்குட் சித்தர் கோடி
          அந்தந்த மலைகளினால் தாக்க வோடி
ஊடையிலே யண்டத்தில் முனிவர் கோடி
          உற்றுநின்ற பதமளவும் ரிடிகள் கோடி
தேடையிலே சதாநித்தம் வேதம் பாரு
          சேர்ந்துநின்ற வோசையிலே தெளியச் சொல்வார்
நாடையிலே யெந்நேரம் மவுனம் நாடு
          நரகமாம் வாசனைதான் நன்றாய்க் கேளு.

விளக்கவுரை :

92. கேளப்பா இதைவிட்டே யுலக ஞானி
          கேட்டதெல்லாஞ் சொல்லுகிறேன் மக்காள் மக்காள்!
நாளப்பா செகமெல்லாஞ் சாங்க மென்பான்
          நலமான நூல்பாரான் தீட்சை யாவான்
காளப்பா மவுனமென்பான் விண்ணைப் பார்ப்பான்
          காதகத்தை விட்டுச்சீ வனத்திற் செல்வான்
நாளப்பா தினந்தோறுந் தர்க்கம் பேசி
          நலமான பெண்ணோடு மயங்கு வானே.

விளக்கவுரை :

93. மயங்குவான் பொன்தேடப் புரட்டும் பேசி
          மகத்தான ஞானமெல்லாம் வந்ததென்பான்;
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்;
          சாதகமா யோகத்திற் சார்ந்தே னென்பான்;
தியங்குவான் நோய்வரிற்பூ ரணமே யென்பான்;
          செகநாத திரோதாயி சிரிப்பாள் பார்த்து;
முயங்குவான் சமாதிவிட் டேனையோ வென்பான்
          மூடமொற்ற ஞானமெல்லா முலகிற் பாரே.

விளக்கவுரை :

94. பாரப்பா சரீரமிது சமாதிக் காக!
          பாழான தூலமிது வென்பார் கோடி
நேரப்பா வாதம்வந்தால் ஞானம் என்று
          நேரப்பா அலைந்தவர்கள் கோடா கோடி;
ஆரப்பா வுலகத்தில் ஞானி யுண்டோ?
          ஆராய்ந்து நான்கண்டே னென்பார் கோடி;
ஏரப்பா அழுதலோவெள் ளாமை யாகும்?
          ஏரில்லா னறுத்தடித்த கதையு மாச்சு.

விளக்கவுரை :

95. கதையாச்சே யுலகத்தில் ஞானம் வாதங்
          கைகண்டாற் சொல்வாரே கல்போல் நெஞ்சே!
அதையாச்சே யிதையாச்சே யென்று சொன்னால்
          அவன்கையி லொன்றுமில்லை யறிந்து கொள்ளே;
உதையாச்சே அரனுடனே தொழிலே நித்தம்
          உதுவான வன்வாதி யுண்மை கேளு;
சுதையாச்சே ஆனாலும் பொங்கி யுள்ளம்
          சுடுவான்பார் ரசயோகி ஞானி தானே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal