இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 126 - 130 of 130 பாடல்கள்



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 126 - 130 of 130 பாடல்கள்

126. கண்ணாடி யினுள்ளே கண்பார்த் துக்கொள்ளுங் கோனே - ஞானக்
கண்ணன்றிக்கண்ணாடி காணவொண்ணா தெங்கள் கோனே.   

விளக்கவுரை :

127. சூனியமானதைச் சுட்டுவா எங்குண்டுகோனே - புத்தி
சூக்குமமே யதைச்சுட்டு மென்றெண்ணங் கொள் கோனே.      

விளக்கவுரை :

128. நித்திய மானது நேர்படி லேநிலை கோனே - என்றும்
நிற்குமென் றேகண்டு நிச்சயங் காணெங்கள் கோனே.   

விளக்கவுரை :

129. சத்தியும் பரமுந் தன்னுட் கலந்தே கோனே - நிட்டை
சாதிக்கி லிரண்டுந் தன்னுள்ளே காணலாங் கோனே.     

விளக்கவுரை :

130. மூகைபோலிருந்து மோனத்தைச் சாதியெங்கோனே - பர
மூலநிலைகண்டு முட்டுப் பிறப்பறு கோனே.     

விளக்கவுரை :

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் முற்றும்

இடைக்காட்டுச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள், idaikattu siththar, idaikattu siththar paadalkal, siththarkal