சட்டை முனி சித்தர் பாடல்கள் 1 - 5 of 200 பாடல்கள்



சட்டை முனி சித்தர் பாடல்கள்  1 - 5 of 200 பாடல்கள்

முன் ஞானம் நூறு

1. அகண்டபரி பூரணமாம் உமையாள் பாதம்
          அப்புறத்தே நின்றதோர் ஐயர் பாதம்
புகன்றுநின்ற கணேசனொடு நாதாள் பாதம்
          புகழ்பெரிய வாக்குடைய வாணி பாதம்
நிகன்றெனவே யெனையாண்ட குருவின் பாதம்
          நிறைநிறையாய்ச் சொரூபத்தில் நின்றோர் பாதம்
முகன்றெனையீன் றெடுத்தசின் மயத்தின் பாதம்
          மூவுலகு மெச்சுதற்குக் காப்புத் தானே.

விளக்கவுரை :

2. தாங்கிநின்ற சரியையிலே நின்றுசடம் வீழில்
          தப்பாது கிரியையுள்ளே சாரப் பண்ணும்
வாங்கிநின்ற கிரியைவிட்டு விழுந்த தானால்
          மகத்தான வுடலெடுத்து யோகம் பண்ணும்
ஓங்கிநின்ற கிரியைவிட்டு விழுந்த தானால்
          உத்தமனே! உயர்ந்துநின்ற ஞானந் தோற்றும்    
பாங்கில்நின்ற அச்சென்மம் மவுன முத்தி
          பரிவாக வாய்ந்தவர்கள் அறிந்து கொள்ளே.

விளக்கவுரை :

3. அறிந்திருந்த நான்குக்கும் விக்கின முண்டாம்
          அப்பனே! ஆகாயமியஞ் சித்தி னோடே
மறிந்துநின்ற பிராரத்தந் தோயத் தோடு
          மகத்தான நாலுக்கும் விக்கின மாச்சு;
பிரிந்துநின்ற நாலினாற் செய்வதென்ன?
          பேரான வறுமையொடு கிலேசந் துக்கஞ்
செறிந்துநின்ற பெண்பொன்னால் மண்ணினாலே
          சேத்துமத்தி லீப்போலத் தியங்கு வாரே.

விளக்கவுரை :

4. தியங்கினால் கெர்ச்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
          சீறியர் மிலேச்சரையே சகத்தி னுள்ளே
மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
          மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ?
தயங்கினா ருலகத்திற் கோடி பேர்கள்;
          சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு;
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு;
          சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப்பாழே.

விளக்கவுரை :
           
5. பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ?
          பரந்தமனஞ் செவ்வையாய் வருவதெப்போ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
          மயக்கமற்று நிற்பதெப்போ? மனமே ஐயோ!
காழான வுலகமத னாசை யெல்லாங்
          கருவறுத்து நிற்பதெப்போ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
          கூடுவது மேதென்றால் மூலம் பாரே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal