இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 111 - 115 of 130 பாடல்கள்



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 111 - 115 of 130 பாடல்கள்

111. ஏப்பம் விடாமலே பாற்கற - வரும்
          ஏமன் விலக்கவே பால்கற.
தீப்பொறி யோய்ந்திடப்பால்கற - பர
          சிவத்துடன் சாரவே பால்கற.       

விளக்கவுரை :

112. அண்ணாவின் வரும் பால்கற - பேர்
          அண்டத்தி லூறிடும் பால்கற
விண்ணாட்டி லில்லாத பால்கற - தொல்லை
          வேதனை கெடவே பால்கற.        

விளக்கவுரை :

கிடை கட்டுதல்

113. இருவினையான மாடுகளை ஏகவிடு கோனே - உன்
அடங்குமன மாடொன்றை யடக்கிவிடு கோனே.

விளக்கவுரை :

114. சாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் - நாளும்
தவமவமாக் கழிப்பவரே சனனமதில் வருவார்.  

விளக்கவுரை :

115. அகங்கார மாடுகண்மூன் றகற்றிவிடு கோனே - நாளும்
அவத்தையெனும் மாடதைநீ யடக்கிவிடு கோனே.       

விளக்கவுரை :

இடைக்காட்டுச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள், idaikattu siththar, idaikattu siththar paadalkal, siththarkal