சட்டை முனி சித்தர் பாடல்கள் 96 - 100 of 200 பாடல்கள்



சட்டை முனி சித்தர் பாடல்கள்  96 - 100 of 200 பாடல்கள்

96. தானென்ற வாதியிலே யிருவ ருண்டு;
          சண்டாள வாதியென்றா லுண்டு டுத்து
வானென்ற ஞானமென்ன வேதை பின்பு
          மகத்தான பெண்ணோடே கூடி யாடிக்
கானென்ற ராககே ளிக்கை பார்த்துக்
          கண்டபெண்ணைத் தாய்போலக் கருதிச் சென்றே
ஊனென்ற உடம்பெடுத்துப் போக வென்பான்
          உலுத்தனுக்குச் செனனமென்ற நரகந் தானே.

விளக்கவுரை :

97. நரகமென்ற பெண்மேலே யாசை விட்டு
          நாதாந்த வேதாந்த சிந்தாந் தம்பார்;
நரகமென்ன வுலகமெலா மனத்தில் வைத்து
          நலமான தேவிகிரி யையிலே நின்று
நரகமென்ன சடமுதல்நா மல்லவென்று
          நாட்டினுள்ளே தசதீட்சை கடந்த பின்பு
நரகமென்ற சிவசொத்தை வறுமை தின்று
          நாமறியோம் வாதமென்றே யிருப்பார் காணே.

விளக்கவுரை :

98. இருக்கையிலே சதகோடித் தொழிலைச் செய்வார்;
          இத்தனைக்கும் பொருளெதிவன் வறுமைக் கென்பார்;  
இருக்கையிலே செயநீர்செந் தூரஞ் சுன்னம்
          எடுத்தெடுத்தே யடுக்கிவைப்பார் அநேகங் கோடி;
இருக்கையிலே தொழிலெடுப்பா ரார்க்குக் காட்டார்;
          இல்லையென்பா ருண்டென்பா ரனேகம் பேர்கள்
இருக்கையிலே சதாநித்த மறிவா லூட்டி
          இருப்பார்கள் மவுனமுத்த வாதி யாமே.

விளக்கவுரை :

99. வாதியென்றா லவன்வாதி மவுன வாதி
          மகத்தான பிரபஞ்சத் திருந்தா லென்ன
வாதியென்றால் ரசவாதி ஞான வாதி
          வாங்காமற் சமாதியிலே யிருந்த வாதி
வாதி யென்றால் நிசவாதி நிர்மல வாதி
          வாய்திறக்க அண்டத்தே வாழ்ந்த வாதி
வாதியென்றா லவரிடத்தே சித்தர் செல்வார்
          மயக்குகின்ற செனனமில்லை முத்தி தானே.

விளக்கவுரை :

100. முத்தியிந்த வாதிக்கு வருகு மென்று
          மூச்சு முதற் சிவன்சொன்னா ரென்று சொல்லிப்
பத்தியிந்த சிவசொத்தைப் பெண்ணுக் கீந்து
          பாழான விடயமெல்லாம் பண்ணிப் பண்ணி
அத்தியென்ற பஞ்சகத்தைப் பண்ணிப் பாவி
          ஆங்காரத் தால் திரிந்தும் வேதை போட்டு
மற்று நின்றே அலைந்தவர்க்கு நரக மெய்தி
          மாளுவார் கோடி சென்ம மருளு வாரே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal