சட்டை முனி சித்தர் பாடல்கள் 101 - 105 of 203 பாடல்கள்

சட்டை முனி சித்தர் பாடல்கள்  101 - 105 of 203 பாடல்கள்

101. மருளாம லிருக்கவல்லோ வாதஞ் சொன்னார்?
          மாண்டிறந்து மாண்டிறந்து பிறக்கை நன்றோ?
வெருளாமல் மனம்பிடித்த வாதி யானால்
          வெகுசுளுக்கே யேறுதற்கு ஞான வீதி
அருளாமோ பொருளாமோ வென்றே யெண்ணி
          அலையாமல் நின்றவனே ஆதியோகி
இருளாமோ வெளியாமோ வென்றே யெண்ணி
          ஏகவெளி சுத்தவிரு ளாகிப் போமே.

விளக்கவுரை :

102. ஆகவப்பா விருப்பத்தோ டஞ்சு நூறும்
          அறைந்திட்டேன் வாதத்தை யறிந்து கொள்ளு;          
ஆகவப்பா இதற்குள்ளே ஞானம்நூறு
          அப்புறத்தே சொன்னதொரு ஞானம்நூறு
ஆகவப்பா இருபத்தோ டெழுநூ றுந்தான்
          அறிந்தமட்டும் சொல்லிவந்தேன் வல்லோருண்டோ
ஆகவப்பா பார்த்தேயிக பரமுஞ் சித்தி
          ஆதியென்ற குருவருளால் சொன்ன முற்றே.

விளக்கவுரை :

பின் ஞானம் நூறு

103. கைலாயப் பரம்பரத்தி லென்னை யாண்ட
          கடவுளெனுந் தெட்சணா மூர்த்தி பாதங்
கைலாயத் தெனையீன்ற ஆயி பாதங்
          கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன்;
கைலாய நிர்க்குணநிர் மலமே தேவர்
          காட்டுகின்றீர் கேசரியின் மயமாய்க் கையில்
கைலாய பரம்பரையாய் வந்த பேர்க்குக்
          கடைப்பிள்ளை ஞானத்தைப் பாடுவேனே;

விளக்கவுரை :
           
104. பாடுகின்றேன் சரியையென்ன? தேவி தீட்சை
          பரிவாகக் கிரியையென்ன? தேவி பூசை;
பாடுகிறேன் யோகமென்மா சற்ற அமுதம்;
          பாங்கான ஞானமென்ன? மௌனத் தந்தம்
பாடுகிறேன் திடத்திரனா யீதோ கீதம்;
          பாங்கான அஞ்சலிதான் மனமாந் தேகம்
பாடுகிறேன் பரன்முனிவ ளுக்கே யென்றால்
          பரிவானால் ஞானவித்தை பலிக்குந் தானே.

விளக்கவுரை :
           
105. தானென்ற ஞானத்தின் பூமி கேளு;
          சாதகமா யோகமென்ற அபர வீடு
வானென்ற பூமியிலே வித்தை கேளு;
          அறிவிற்கு மறிவான வுகார விந்து
வேனென்ற வெளியெல்லாம் படைத்து நின்று
          வேதாந்த அண்டமென்ற மகார மாச்சு;
கோனென்ற நாதமங்கே குமுறி யாடும்;
          கூப்பிட்டாற் கேளாது கண்ணும் போச்சு.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal