சட்டை முனி சித்தர் பாடல்கள் 166 - 170 of 203 பாடல்கள்
166. ஆச்சப்பா மாயையொடு மாய வின்பம்
அப்பனே சுத்தசை தன்ப மூன்றும்
போச்சப்பா ஆகாயம் போலே எங்கும்
ஓடியெங்கும் மறைந்திருக்குங் கண்டா லுந்தான்
ஆச்சப்பா அவர்களைத்தான் தீர்த்த மூர்த்தி
யாகநனி தோத்திரமாய்த் தியானம் பண்ண
வீச்சப்பா பிரமமென்றே தியான மாச்சு
விளம்புகிறேன் ஐந்துவகைச் சமாதி தானே.
விளக்கவுரை :
167. தானென்ற அதிட்டான சைதன் யத்தைத்
தனையளித்து நிலவறையில் தீபம் போல
ஆனென்ற அலைவற்றுத் திடம தாக
அப்பனே அகண்டமது தானாய் நின்று
வேனென்ற தோற்றமற்றே யிருந்தா யானால்
விளங்கியதோர் தத்வலயச் சமாதி யாச்சு
வானென்ற சவ்விகற்பச் சமாதி கேளு
மருவியதோர் தத்வலயச் சமாதிக் குள்ளே.
விளக்கவுரை :
168. உள்ளாக இருக்கையிலே பேசுஞ் சுற்றம்
உறவாகக் கேட்டாக்கந் தாணு வித்தை
தள்ளாகச் சவ்விகற்பச் சமாதி யென்று
தாமுரையார் பெரியோர்கள் கேளு கேளு
விள்ளாகத் திரிசாணு வித்தை மார்க்கம்
விரவியந்தச் சமாதியிலே நிற்கும் போது
தள்ளாகத் தன்னையனு சந்தா னித்துத்
தலமான சந்தானந் திரிசான மாச்சே.
விளக்கவுரை :
169. ஆச்சப்பா இதன்பேர்சவ் விகற்ப மென்பார்
அருளியதோர் நிருவிகற்பச் சமாதி கேளு!
ஓச்சப்பா தத்வலயச் சமாதி முத்தி
உத்தமனே சாத்தனுத்தங் கேம றந்த
ஆச்சப்பா துக்கமுற்று மிருகம்போல
ஆச்சரியஞ் சத்தமெல்லாங் கேளா விட்டால்
கூச்சப்பா சித்தமது சொரூபத் துள்ளே
கொண்டாற்பூ ரணத்தில்நிரு விகற்ப மாமே.
விளக்கவுரை :
170. ஆமப்பா சமாதிவிட்டுச் சரிக்கும் போதும்
அப்பனே சாத்திரங்கள் பார்க்கும் போதும்
ஒமப்பா காலமென்ற நிறையு மில்லை
உத்தமனே பிரபஞ்ச மில்லை யென்று
சோமப்பா விகாரந்தோற் றும்ப்ர பஞ்சஞ்
சொப்பனம்போல் பாசமென்ற மதிய டக்கில்
ஆமப்பா தீவிரமாம் பிறவி யார்க்கும்
அகத்தான காரணனா மென்றே யெண்ணே.
விளக்கவுரை :
சட்டை முனி சித்தர் பாடல்கள் 166 - 170 of 203 பாடல்கள்
சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal