சட்டை முனி சித்தர் பாடல்கள் 176 - 180 of 203 பாடல்கள்
மாயை யுத்தி
176. ஆச்சப்பா மாயையுத்தி சொல்ல வென்றால்
அனேக முண்டு; சூட்சுமமாய்ச் சொல்லக் கேளு;
வாச்சப்பா தேசத்திற் பேதா பேதம்
மருவியதோர் கிராமத்தில் கிராம பேதம்
ஓச்சப்பா திறங்களிலே திறங்கள் பேதம்
ஓகோகோ சனங்களிலே யனேக பேதம்
வீச்சப்பா புத்திகளிற் பேதா பேதம்
வெகுமோக மாயத்தாற் றோன்றுங் காணே.
விளக்கவுரை :
ஞானவான்
177. காணப்பா வின்னமய மாகி நின்று
கலந்துநின்ற புராணமய கோச மாச்சே
ஊணப்பா விக்யான மயமு மாகி
உத்தமனே மனோமயமாங் கோச மாச்சு
பூணப்பா ஆனந்த மயமு மாகப்
பொங்கிற்றே யஞ்சுதிறை போதத் துக்குத்
தோணப்பா திறையஞ்சு மாயை மாயை
சொல்லுகிறேன் சூட்சத்தைப் பூட்டிப் பாரே.
விளக்கவுரை :
178. பூட்டியதோர் விசிட்டனென்றும் விராடனென்றும்
புகழ்பெரிய ஏமகற்பப் போக்கே தென்றும்
நீட்டியதோ ரண்டமென்றும் புவன மென்றும்
நேரான பதங்களென்றும் மாயை யாச்சே
ஆட்டியதோ ராட்ட மெல்லாம் மாயை யாட்டே
அறிந்துகொள்ளு முன்மனமே மட்டை மாயை
மூட்டியதோர் மனமும்வந்த வரைக்கே நிற்கும்
மூதண்ட மனங்கடக்க முடியா வாறே.
விளக்கவுரை :
179. வாறான வுலகத்திற் சுத்த வீரன்
மனத்தோடே போராடி யருவில் மாள்வான்
கூறான ஞானியென்றால் லிங்கம் புக்குக்
குறியான அம்பலத்தில் சேர்வா னப்பா
தாறான வுலகத்தோர்க் கடுத்த ஞானஞ்
சகத்திரமாங் கோடியிலே யொருவர் சொல்வார்
வீறான சிலபேய்கள் சாங்கம் பேசி
விழித்திறந்து விழித்திறந்து திரிவர் தானே.
விளக்கவுரை :
180. தானென்ற பிரமருமோ ரறிவிற் சென்றார்
சாதகமாய் மாலென்றால் அறிவிற் றோன்றும்
கோனென்ற ருத்திரனோ ரருவி லந்தங்
கொள்கின்ற மகேச்சுரனோ ரறிவிற் றோன்றும்
வானென்ற சதாசிவனோ மணியைக் காண்பான்
மகத்தான ஐவருந்தா னாக்கிப் பீடம்
வேனென்ற பஞ்சகர்த்தாள் மட்டுஞ் சென்றால்
வேதாந்தி யெனமட்டுஞ் சொல்வார் பாரே.
விளக்கவுரை :
சட்டை முனி சித்தர் பாடல்கள் 176 - 180 of 203 பாடல்கள்
சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal