சட்டை முனி சித்தர் பாடல்கள் 201 - 203 of 203 பாடல்கள்
201. ஆச்சப்பா சனனமிந்தப் படியே யாகில்
அடங்கிறதக் கனியும்ரவி மதியுங் கூடி
வாச்சப்பா சந்திரனிற் கலந்து போனால்
மாளுகிற விதமிதுதான் குளிர்ந்து போகும்
நீச்சப்பா சின்னமொடு பாணம் ரண்டும்
நேராக மனோன்மணியைத் தொட்டு மீறாம்
ஓச்சப்பா லக்கமில்லை யெழுவகைத் தோற்றம்
உத்தமனே நாலுவகை யோனி காணே.
விளக்கவுரை :
202. காணிந்தப் படியெல்லாங் கண்டு கொண்டு
கலங்காம லிருக்காமல் யுகமே கோடி
வானிந்த காயமட்டே சால மெல்லாம்
மனந்தாண்டி அறிவில்வந்த தெல்லாம் போச்சே
ஆனிந்தப் படிநீங்கள் சமாதி கொண்டே
அரைவிட்டால் குளிகையிட் டோடிப் பாரு
தோணிந்தப் படிசொன்னேன் முன்னைத் தூக்குச்
சுழற்காற்றுத் துரும்பதுபோல் மவுன மாமே.
விளக்கவுரை :
203. மௌனமென்றீ ரெனையாண்ட தட்சிணா மூர்த்தி
மலர்பணிந்தே ஞானமது நூறுஞ் சொன்னேன்
மௌனமென்ற நாதாக்கள் பதத்தைப் போற்றி
வகையோடே நிகண்டாக வாதஞ் சொன்னேன்
மௌனமென்றீர் ஞானம்பொய் யென்று சொல்லி
வாகான செயமண்டி போட்டே நூற்றில்
மௌனமென்ற சமரசத்தான் மக்காள் மக்காள்
வாகான ஞானமுறை முற்றுங் காணே.
விளக்கவுரை :
சட்டை முனி சித்தர் பாடல்கள் முற்றும்.
சட்டை முனி சித்தர் பாடல்கள் 201 - 203 of 203 பாடல்கள்
சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal