சட்டை முனி சித்தர் பாடல்கள் 121 - 125 of 203 பாடல்கள்

சட்டை முனி சித்தர் பாடல்கள்  121 - 125 of 203 பாடல்கள்
           
121. ஆச்சப்பா நாள்வரையி லேறும் போது
          அரகரா வெகுகோடி யிடிபோல் நாதம்
மூச்சப்பா வோடாது முன்பின் றோணா
          முதிர்ந்தமன மாயையினால் பின்னுஞ் சென்றார்
கூச்சப்பா ஐவரையிற் போக்கி நின்று
          குருகுரென மொழிந்ததிலே மனமுந் தேறிப்
போச்சப்பா சடமொன்று நிராசை யாகிப்
          புக்கினார் அறுவரையிற் புக்கினாரே.

விளக்கவுரை :
122. புக்கியல்லோ சுழல்காற்றின் துரும்பு போலே
          புலம்பினார் மூலருடைப் பேரன் பேரன்
மக்கியல்லோ மனம்போச்சுக் குளிகை போச்சு;
          மாறாத மௌனமுன்னே மாண்டு போச்சு;
ஒக்கியல்லோ சிலம்பொலிதா னுள்ளே வாங்கி
          ஓகோகோ குளிகையது கீழே வாங்கு
சொக்கியல்லோ யென்செய்வே னென்றே யேங்கித்
          துரியத்தை விட்டு மெள்ளக் கீழ்க்கொண் டாரே.         

விளக்கவுரை :
           
123. கீழ்க்கொண்டார் கீழ்க்கொண்ட கொடியாஞ் சித்தர்
          கேசரத்தை விட்டுமெள்ள அறிவில் நின்று
நாட்கொண்ட பாடெல்லாம் நினைத்துக் கொண்டு
          நான்பிழைத்தே னான்பிழைத்தே னென்று சொல்லி
ஆட்கொண்டா என்குருபூ ரணத்தில் நின்றீர்
          ஆச்சரிய மெனையீன்று மிவரை யையா!
வேட்கொண்டா யென்றவத்தை யீந்த னையா
          வெறுவெளியாஞ் சிலம்பொலியை மேவென் றாரே.

விளக்கவுரை :
           
124. மேவென்று சொல்லுமுன்மேற் கண்ட போகர்
          வேதாந்த சிரோமணியைப் பெறுதி மைந்தா!
கோனென்ற குருவுக்கும் அவரே சீடர்
          கோடிலட்சத் தொருசீட ருண்டோ காணேன்;
பானென்ற வேதாந்தஞ் சித்தாந் தம்பார்
          பறக்கிறதோர் குளிகைமுதல் வாதம் பார்த்துத்
தேனென்ற கைலாய வர்க்க மாகிச்
          சித்தருக்குச் சித்தராய் ரிஷியா னாரே.

விளக்கவுரை :
           
125. ரிஷியென்ன சிலம்பொலியைக் கண்டா ருண்டோ
          நேராக வதற்குள்ளே சேர்ந்தா ருண்டோ
ரிஷியென்ன ரசவித்தை யறிந்தா ருண்டோ
          நிமிடத்தில் கவனமுற்றுத் திரிந்தா ருண்டோ
ரிஷியென்ன அண்டமுதற் புவனந் தாண்டி
          நின்றநிறை யாய்க்கண்டு வந்தோ ருண்டோ
ரிஷியென்ன மவுனமுற்றுச் சுமாதிக் குள்ளே
          நின்றதனால் திகைமையாய் நினைவாய்க் காணே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal