சட்டை முனி சித்தர் பாடல்கள் 161 - 165 of 203 பாடல்கள்
161. கலங்காமல் தாப்பிரம மென்றே யெண்ணிக்
கவடற்று நிரந்தரம்வே தாந்தம் பார்த்தே
மலங்காமல் நிற்கிறதே விரத மப்பா
மகத்தான நேமமென்ற பத்து மாச்சே
இலங்காம லிருப்பதையும் மனுட்டித் தக்கால்
என்மகனே மனந்திடமா யில்லா விட்டால்
துலங்காத சுவரில்சித் திரம்போ லாகும்
சுழியதுதா னடிப்படைமூன் றொன்றும் வாறே.
விளக்கவுரை :
162. வாறாகச் சுகாசனமா யிருந்து கொண்டு
மருவியதோர் மூலத்தில்வங் கென்று பூரி
கூறாகக் கும்பித்துமாத் திரையை யேற்றிக்
குறியோடே சிகாரத்தால் ரேசி ரேசி
சாறாக விப்படியாங் கென்று கும்பி
சாதகமா யிவைமூன்றும் தீர்ந்த பின்னே
ஆறாக அகாரமுத லுகாரங் காட்டி
அப்பனே மவுனத்தாற் கும்பித் தேறே.
விளக்கவுரை :
163. கும்பித்து மௌனந்தான் குவிந்த பின்பு
கொள்கியதோர் மூலத்தை விட்டு நீயுந்
தம்பித்துக் கண்டத்தே நின்றே யூது
தாலடங்கி யுரைத்தபின்மேல் மூலம் நின்று
சொம்பித்தே யறிவோடே மௌனம் பூரி
சுகமாகப் பூரணத்தை யதற்குட் கும்பி
தம்பித்து மனத்தொடுரே சகத்தைப் பண்ணு
தலமான பிரமமென்று பிராண னாச்சே.
விளக்கவுரை :
164. ஆச்சப்பா இதுவல்லோ பிராணா யாமம்?
அறிந்தவனார் சிவயோகி யறியார் மற்றோர்
ஓச்சப்பா பிரபஞ்ச வாசை விட்டே
ஒன்றையுந்தான் மனத்தினுள்ளே சங்கி யாமல்
வாச்சப்பா வந்ததென்ற காரண மாக
மருவியதோர் ஞானமென்ற மார்க்கத் தூடிக்
கூச்சப்பா காமியத்தை நரகென் றெண்ணக்
கூறான கர்மமெல்லாம் விடுக்க நன்றே.
விளக்கவுரை :
165. நன்றாக வேதாந்த சாத்தி ரத்தால்
நாம்சாட்சி யென்று நித்த முரைத்து நின்று
பன்றான மற்றவைநாம் அல்ல வென்று
பரவிநின்றே யுலகமெல்லாம் மித்தை யென்று
கன்றாக வுரைப்புநிரந் தரமு நினைவாய்க்
காரணகா ரியங்களெல்லாந் தவிர்ந்து போட்டு
ஒன்றான வொருபொருளாய் நின்றா யானால்
உத்தமனே பிரத்தியா கார மாச்சே.
விளக்கவுரை :
சட்டை முனி சித்தர் பாடல்கள் 161 - 165 of 203 பாடல்கள்
சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal