சட்டை முனி சித்தர் பாடல்கள் 171 - 175 of 203 பாடல்கள்

சட்டை முனி சித்தர் பாடல்கள்  171 - 175 of 203 பாடல்கள்
           
171. எண்ணியல்லோ மனத்துள்ளே படாதே நீக்கி
          ஏக்கமாய் நிருவிகற்ப மாகி நின்றே
அண்ணியல்லோ பிரபஞ்ச விகற்பந் தள்ளி
          அனுபோக நிருவிகற்பச் சமாதி யாச்சே
ஒண்ணியல்லோ சொரூபத்தில் லயிச்சு நின்றே
          உற்றிருந்த அகண்ட விர்த்தி காற்றில் தீபந்
தண்ணியல்லோ வுப்புண்டாற் போலே மைந்தா
          சாதகமா யுன்னுருவங் கெட்டுப் போச்சே.

விளக்கவுரை :
           
172. போச்சதுவுங் கடிகையென்று தானாய் நின்றாற்
          புகழான பெருமை சொல்ல வென்றாற் கூடா
ஆச்சதுவு மவுனமுற்று வாயை மூடி
          ஆசையற்றே இருந்தல்லோ அகண்ட வீதி
வாச்சதும்ப்ர பஞ்சத்திற் கண்ட தெல்லாம்
          வாலையுட னுரைபோலும் மலைபோற் காணும்
கோச்சதுவுஞ் சிலந்தியுடை நூலும் போலக்
          கூறுமத னங்கம்போற் குறியைக் காணே.

விளக்கவுரை :
           
173. குறியன விண்ணுதித்த மேகம் போலுங்
          கோதியதோர் சொப்பனப்ர பஞ்சம் போலும்
நெறியான அகண்டம் நம் மிடத்தே மைந்தா!
          நேராக வுண்டாகில் இற்றுப் போற்று          
பறியான வெவ்வேறு நாம மாகிப்
          பாழுலகு நம்மிடத்தே தோன்றுந் தோறும்
மறியாக வழிந்துபோம் நாமே பிரமம்
          மற்றொன்று மில்லையென்று மயக்கந் தீரே.

விளக்கவுரை :
           
174. மயக்கமற்று நானொருவ னெனக்கு ளெல்லாம்
          மற்றொன்று மில்லையென்று தீர னாகித்
தியக்கமற்றெந் நேரமுமுள் ளிட்டுக் கொண்டு
          சேர்ந்துவருஞ் சந்தோடந் துக்கந் தள்ளி
முயக்கமற வருட்பெய்து முன்னே வந்து
          முன்னின்று விகற்பங்கள் பண்ணி னாலும்
அயக்கமற்று மனதிடமாய்ச் சதமாய்த் தள்ளி
          ஆராதி கொண்டகறித் தானாய் நில்லே.

விளக்கவுரை :
           
175. நில்லப்பா சஞ்சாரத் தாலத் துள்ளும்
          நேராகச் சமாதியிலே யிருக்கும் போதே
அல்லப்பா தொய்தம்வந்தா லாதரவு பண்ணி
          அசையாத மலைபோல விருக்க நன்று
சொல்லப்பா கற்பமது கண்டத் தெய்துஞ்
          சுட்டிநின்று திடப்படுதல் மெத்த நன்று
வெல்லப்பா வாசனையை விண்டா யானால்
          மேவியதோ ராரூடச் சமாதி யாச்சே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal