சட்டை முனி சித்தர் பாடல்கள் 111 - 115 of 203 பாடல்கள்

சட்டை முனி சித்தர் பாடல்கள்  111 - 115 of 203 பாடல்கள்            
111. கேளப்பா மூலர்க்குகா லாங்கி பிள்ளை;
          கெடியான காலாங்கி மைந்தர் போகர்;
நீளப்பா போகர்பிள்ளை கொங்க ணர்தான்;
          நேராக நான்குமுறை பேர னாகித்
தாளப்பா மேருவிலே தவசு பண்ணிச்
          சாதகமாய்க் கைலாய வர்க்க மானார்;
ஆளப்பா பிள்ளையென்றா லவரே பிள்ளை;
          ஆச்சரிய மின்னமுண்டு சொல்லு வேனே.

விளக்கவுரை :
           
112. சொல்லுகிறேன் சிங்கென்று முன்னே யூன்றிச்
          சோதிகண்ட பின்பதிலே மனத்தை யூன்றிச்
சொல்லுகிறேன் அங்கென்று பின்னே யூன்றிச்
          சோதியிலே அக்கரங்கள் தனமுங் கண்டு
சொல்லுகிறேன் பின்பல்லோ மவுன முன்னித்
          தொடர்ந்தேறித் தளமெல்லாம் பார்த்துக் கொண்டு
சொல்லுகிறேன் புருவமை யத்திற் கூடித்
          துரியமென்ற அறிவினுள்ளே சொக்கினாரே.

விளக்கவுரை :
           
113. சொக்கியல்லோ அறிவைவிட்டே அகண்ட மேறித்
     துயரறவே சமாதியுள்ளே கற்ப முண்டு
சொக்கியல்லோ மூன்றுவரை சடத்தோ டொக்கச்
     சுருபவரை காணவென்று துணிந்து பொங்கிச்
சொக்கியல்லோ ஏறுவதற்கிவ் விதமா மென்று
     சோதித்துக் குளிகையெல்லாம் பார்த்துப் பார்த்துச்
சொக்கியல்லோ ஏற்றிவைக்குஞ் சுரூபமணியென்று
     சூட்சமாய் மூலருடை நூல் பார்த்தாரே.

விளக்கவுரை :

114. பார்த்தறிந்தா ரிந்தமணி வாத மென்று
          பரிவான கயிலாய தெட்சணா மூர்த்தி
சேர்த்தறிந்த தம்முடைய வர்க்க மான
          சீடரிலே திருமூலர் சண்டி கேசர்
மாத்தறிஞ்ச சனகாதி நால்வ ரோடு
          மருவிநின்ற வியாக்ரபதஞ் சலியினோடு
போக்கறிந்த வடியெனொடொன் பதுபேர் பிள்ளை
          புகழான பூரணத்தி லெழும்பென் றாரே.

விளக்கவுரை :
           
115. எழும்பையிலே நிர்மலம்போற் சடமோ காணா
          தேனென்றாற் பூரணந்தா னெதுக்குப் பேசும்
எழும்பையிலே குளிகைமுதற் காண்டிற் பத்தே
          ஏற்றியதோர் தீபத்தின் சுடர்போற் காணும்
எழும்பையிலே தேகமில்லை கோடா கோடி
          எடுத்தசடஞ் சூட்சுமமா யிருந்த தென்றால்
எழும்பையிலே மேலெழும்பி மௌன முற்றும்
          இருந்துரைத்த சமாதியுடைப் பலந்தான் காணே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal