சட்டை முனி சித்தர் பாடல்கள் 106 - 110 of 203 பாடல்கள்
106. போச்சப்பா தத்துவங்க ளனித்தியப் பட்டுப்
புலன்கெட்டு நிலங்கெட்டுப் பொறியுங் கெட்டே
ஆச்சப்பா மனவரையில் மயங்கி நின்றே
ஆடுவதோர் படம்போல அசைந்து தள்ளு;
நீச்சப்பா கடநீச்சுத் திரோதாயி வெள்ளம்
நிலையேது கரையேது தவணை யேது?
மூச்சப்பா அடங்கு முன்னே மாயை வந்து
முற்றிமுதிர்ந் தளிவுதள்ளு மோசங் காணே.
விளக்கவுரை :
107. காணப்பா மனவரையை மாறுக் குள்ளே
கடைத்தேறப் போகாது கறக்க மெத்த
ஊணப்பா வென்று சொன்னால் மனமூ ணாதே
உற்றுமெள்ளப் பிடித்தாலும் மாயை கட்டும்;
வீணப்பா வுலகத்தோர் ஞான மெல்லாம்;
வேதாந்த சித்தாந்த மென்பார் கோடி
தோணப்பா ஞானமென்ன கண்டிப் பில்லைச்
சுடர்கோடி யொளிபோலத் தோன்றுந் தானே.
விளக்கவுரை :
108. தானென்ற நிர்மலமா மனத்தின் வீதி
தாண்டரிது தாண்டினா லறிவு போற்றும்
கானென்ற மனத்தின்சா தகத்தைக் கேளு
கற்பமுண்ண வந்துண்ணால் வாசிதோறும்
பானென்ற பாணத்தின் பாதை நில்லு
பகலாலுங் கேசரத்தில் மனந்தா னெட்டும்
வானென்ற வெட்டவெளி வடிவு காணும்
மாச்சல் மெத்த மாச்சல்மெத்த மருவி கூடே.
விளக்கவுரை :
109. கூடுவது நிமைக்கு முன்னே குளிகை கூட்டுங்
கூப்பிட்டால் பூரணந்தான் கூடப் பேசும்;
ஆடுவது மனவரையில் மாயம் போக்கும்
அருவிலே சொக்கின்றி ஆட்டுவிக்கும்
நாடுவது பூரணத்தி லேற்றிக் காட்டும்
நலமான சாணையார் கெவுனஞ் சூதம்
தேடுவது சித்தருக்குக் குளிகை கெட்டுச்
செகத்தோர்க்கு வாதமென்றே தேட்டுத் தானே.
விளக்கவுரை :
110. தேட்டான வரைகடந்து மனமுந் தாண்டித்
தெளிவான அறிவினுடை வரையுந் தாண்டி
நீட்டான பூரணத்தின் வரைகா ணென்று
நேரான மூன்றுவரை யேறிச் சொக்கிப்
பூட்டான பூட்டிறங்கி விட்டேன் மைந்தா
புகழான வெறுவெளியி லேறப் போகா
ஆட்டான கைலாயப் பரம்பரை வந்த
ஆச்சரிய மூலகுரு வாக்குங் கேளே.
விளக்கவுரை :
சட்டை முனி சித்தர் பாடல்கள் 106 - 110 of 203 பாடல்கள்
சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal