சட்டை முனி சித்தர் பாடல்கள் 116 - 120 of 203 பாடல்கள்

சட்டை முனி சித்தர் பாடல்கள்  116 - 120 of 203 பாடல்கள்
           
116. காணப்பா சொரூபமொன்று கலிதா னொன்று
          கையடங்கா தட்டமா சித்தி யொன்று
பூணப்பா கைகொடுசின் மயமாந் தேவர்
          பொருளோடே அருளான போக்குக் காட்டித்
தோணப்பா தோன்றிநிற்கும் சும்மா அம்மா
          சுபமாக இசைந்ததிலே சொக்கு மென்பார்;
வீணப்பா மற்றதென்சின் மயத்தைக் காட்டி
          வேதாந்த மூலத்தை விளம்பென் றாரே.

விளக்கவுரை :
           
117. விளம்பினார் சனகாதி வேதங் கோடி;
          விதத்தாரே மவுனத்தைச் சண்டி கேசர்
விளம்பினார் பதஞ்சலியு மனந்தங் கோடி;
          விரித்தல்லோ திருமூல ரனேகஞ் சொன்னார்;
விளம்பினார் வாவாதா மென்று யானும்
          விரியாம லிருநூறு ஞானம் சொன்னேன்;
விளம்பினார் வெகுவாக என்னூல் கொஞ்சம்
          வேதாந்த மிருநூறும் விரைந்து காணே.

விளக்கவுரை :

118. காணப்பா மும்மணிகை லாய வர்க்கம்
          கழியாமற் பிள்ளைகட்கே மற்றோர்க் கில்லை;
தோணப்பா இவைமூன்றுஞ் சித்தர் சொல்வார்
          சொற்பெரிய பூரணமே சொல்ல வேணும்;
வீணப்பா ஆராலும் சொல்லக் கூடா
          வேதாந்த அந்தத்தில் வெளியிற் கூட்டும்
ஆணப்பா அறுபத்துநால் மரபுக் குள்ளே
          ஆருமே யில்லையதை அறியார் காணே.

விளக்கவுரை :

119. அறியாத குளிகையுடன் சாரணையிற் குத்து
          அதன்பெருமை காணக்கொங் கணரைக் கேளு;
அறியாத அண்டமுதற் புவனம் பார்த்து
          அருவியதோர் பதம்பார்த்துத் திரிந்தே ஆடிக்
குறியாகக் கற்பமெல்லா மேறிப் பார்த்துக்
          கூறாத பூரணத்தைக் காண்பே னென்று
நெறியாக மனமுரைக்கக் குளிகை கட்டி
          நேராக மனவரையி லேறி னாரே.

விளக்கவுரை :
           
120. ஏறினா ரறுவரையி னியல்புங் கண்டே
          இதமாக அறிவுடைய வரையிற் சென்று
தேறினார் மனமுரைத்தார் கண்டத் தேறச்
          சேர்ந்தேறச் சேர்ந்தேறி வரையிற் றாண்டிக்
கூறினா ரிவ்வளவு மொன்றோ வென்றார்
          கூசாமல் மருவரையில் குதிரைப் போட்டார்
மாறினால் சென்றுமணம் பிடித்துச் சென்றார்
          வரைமூன்றுங் கடக்கவொரு கற்ப மாச்சே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal