சட்டை முனி சித்தர் பாடல்கள் 191 - 195 of 203 பாடல்கள்
191. மௌனவித்தை மூலருக்கு முன்னே சொன்னேன்
மருவியவர் காலாங்கிக் கதுவே சொன்னார்
மௌனவித்தை யகண்டாதி யறிந்து கொள்ளும்
மகத்தான போகருந்தா னுமக்குச் சொன்னார்
மற்றொன்று மயக்கமற்று மௌனத் தார்க்கு
மௌனவித்தை யெய்திக்கா லவனே ஞானி
பற்றொன்றும் வையாதே பலருங் காண
வாய்திறந்து பேசாதே மகாரம் நன்றே.
விளக்கவுரை :
192. நன்றான மௌனத்திற் கடிகை சேர
நல்வினையுந் தீவினையும் நாச மாகும்
நன்றான மௌனமென்று நினைக்க முத்தி
நல்லோர்கள் நினைப்பார்கள் மற்றோர் காணார்.
நன்றான மௌனமல்லோ ரிஷிகள் சித்தர்
நாலுதிக்குஞ் சொருபமல்லோ ஞானி யானார்
நன்றான மௌனத்தைக் கண்டார் முன்னே
நலமாகக் கூப்பிடுதல் கண்டி லாரே.
விளக்கவுரை :
193. கண்டிலார் மோனத்தி லனேக சித்தி
காணுமப்பா சொல்லுகிறேன் நன்றாய்க் கேளே
அண்டிலார் மந்திரங்கள் செபிக்கும் போது
அப்பனே மௌனமென்றே தீட்சை கேளு;
ஒண்டியாய் வாய்மூடிப் பேச்சு மற்றே
ஒருசேரச் சமைத்துண்ணு ஒருபோ தப்பா
விண்டிலா தெந்நேரஞ் செபித்தா யானால்
விளங்கியதோ ரேழுலட்ச மந்த்ரஞ் சித்தே.
விளக்கவுரை :
194. சித்தாகுஞ் சித்தியுமா மெட்டெட் டாகுந்
திறமாக நின்றவர்க்கு மந்த்ரஞ் சித்தி
சத்தாகும் வேதமந் திரத்தைப் பாவி
சலசலெனப் பசிச்சே விப்பார் கோடி
கத்தாதும் நாய்போல கத்தி யென்ன
காசுக்கு மாகாது சித்தி யில்லை
முத்தான மௌனம்விட்டால் மனம்பா ழாச்சு
மோசமிந்த வேதமெல்லாம் பொய்யென் பாரே.
விளக்கவுரை :
195. பொய்யென்றே யெண்ணியெண்ணி யுலகங் கெட்டுப்
போச்சதனா லேயுகத்தின் பேத மாச்சு;
கையென்று யோகத்தில் மௌன முட்டக்
கடுஞ்சித்தி யறிவுமட்டுங் கலந்து தாக்கு
சையென்ற நிர்த்தமப்பா ஆறிற் காணுஞ்
சாதகமாய் மேல்மூலந் தாண்டிக் காணும்
மெய்யென்று பிடித்தக்கா லவனே யோகி
விரைந்திதனை யறியாட்டால் விருதா மாடே.
விளக்கவுரை :
சட்டை முனி சித்தர் பாடல்கள் 191 - 195 of 203 பாடல்கள்
சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal