சட்டை முனி சித்தர் பாடல்கள் 131 - 135 of 203 பாடல்கள்

சட்டை முனி சித்தர் பாடல்கள்  131 - 135 of 203 பாடல்கள்
           
131. தானென்று சொன்னதென்ன என்னைப் பெற்ற
          சச்சிதா னந்தவெள்ளத் தயவுள் ளாரே
கோனென்ற முக்குளிகை நமக்குண் டையா
          கொடியதொரு மவுனவித்தை நமக்குண் டையா
பானென்ற வாசிவித்தை நமக்குண் டையா
          பாங்கான காயசித்தி நமக்குண் டையா
வானென்ற வெட்டவெளி யேறி யாடி
          வருகிறேன் விடைகொடுத்து வாழ்த்தி டீரே.

விளக்கவுரை :
           
132. வாழ்த்தியுன்னை யனுப்பினால் பூர ணந்தான்
          வரைகடந்தே ஆறுவரை யேறு வாயோ?
வாழ்த்தியுன்னை யனுப்பினால் நரகத் துள்ளே
          மயங்காமற் சொல்லுவையோ மைந்தா சொல்லு
வாழ்த்தி யுன்னை யனுப்பினா லிடியிற் குள்ளே
          மயங்காமற் றியங்காமல் மருவு வாயே?
வாழ்த்தியுன்னை யனுப்பினா லென்ன முன்னால்
          வாய்ப்பேச்சா வரைகடக்கும் மார்க்கம் தானே?

விளக்கவுரை :

133. மார்க்கமென்ன எனையீன்கை லாய மூர்த்தி!
          மகத்தான சமாதியுள்ளே கற்பம் வாழ்ந்தேன்
சேர்க்கமென்ன சிவாலயங்கள் பலியேற் றுண்டேன்
          சிவமேது நீரன்றி வேறு காணேன்
ஆர்க்கமென்ன குளிகையிட்டுச் சென்று போறேன்
          அங்கங்கே மனந்தேறிப் போறேன் போறேன்
தீர்க்கமென்ன சொக்கினாற் சொக்கிப் போறேன்
          திரும்பினால் சடத்தோடே திரும்பு வேனே!

விளக்கவுரை :

134. திரும்புவையோ என்மகனே திடந்தா னுண்டோ
          சிறுபிள்ளை புத்தியல்லோ செப்பு றாய்நீ?
வளர்பிறையோ தேய்பிறையோ ரவியி னுள்ளே
          வருவதுபோ லல்லவது மாட்டி வாங்கும்
பரும்பிறையோ யோகமது பிறவி கோடி
          பாங்கான வொளிக்குள்ளே கண்ணோ கூசும்
அரும்பிறையோ மனந்தளும்பு மேவொட் டோதே
          அரகரா என்மகனே யறிவாய் நீயே.

விளக்கவுரை :
           
135. அறியாத வரைபார்க்க நான்தா னேறி
          அய்யனே மூன்றுவரைக் குள்ளே சிக்கி
நெறியாக நால்வரையி லேறொட் டாமல்
          நிமிடத்தி லறிவினிலே வந்து நின்றே
மறிவானம் படைத்தகொங் கணரே சித்தர்
          மற்றோரை யான்காணேன் மைந்தா சொல்லு
பொறியான வழியடக்கிச் சூட்ச மாகிப்
          போனவரார் போகருடைப் பிள்ளை தானே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal