சட்டை முனி சித்தர் பாடல்கள் 141 - 145 of 203 பாடல்கள்

சட்டை முனி சித்தர் பாடல்கள்  141 - 145 of 203 பாடல்கள்
           
141. இறங்கினே னால்வரைக்கப் புறமே போக
          என்னாலே முடியாதே யேதோ அஞ்சில்
இறங்கினே னென்மக்கா ளும்மா லாமோ
          ஏதுசொன்னாய் பேய்ப்பிள்ளா யென்ன பேச்சு
இறங்கினே னிந்நாள்பின் னையார் சொல்லார்
          ஏகவெளி திக்காடு மிடியோ கோடி
இறங்கினே னென்னாலே முடிவு காணேன்
          ஏறினார் கொங்கணர்தா மேறி னாரே.

விளக்கவுரை :

கொங்கணர் மகத்துவம்

142. ஏறியதோர் கொங்கணரைப் போலே யில்லை
          ஏகவெளி தீக்காட்டெப் படியோ போனார்
மாறியதோர் மனம்பிடித்தார் யோக மானார்
          மாளுவது நிசமென்று வாய்மை பூண்டார்
கூறினதோ ரறுவரையைக் கண்டு முட்டக்
          குமுறியதோர் சிலம்பொலியைக் கேட்டு மீண்டார்
ஆறியதோர் மனங்கண்டா ரவரே சித்தர்
          ஆச்சரியங் கொங்கணர்போ லார்கா ணேனே.

விளக்கவுரை :
           
143. காணரிது காணரிது கோடா கோடி
          கண்டுநான் பாபருட்ச சித்தர்க் குள்ளே
பூணரிது பூணரிதே அகண்ட வீதி
          புக்கல்லோ சிலம்பொலியைக் கேட்க மாட்டார்
ஊணரிது ஊணரிது வெளியிற் பார்த்து
          ஓடுவரோ வென்றீர்கள் மக்காள் நீங்கள்
தோணரிது தோணரிதாய் நின்ற ஞானம்
          சீடருக்குள் ளோடுறது துரியந் தானே.

விளக்கவுரை :
           
சாங்கத்தார்
144. தானென்ற பூரணத்தைச் சாங்கத் தோர்கள்
          சகமெல்லாம் நிர்க்குணமாய் நின்ற தென்பார்
வானென்ற வெளியென்பா ரில்லை யென்பார்
          வாய்பேசார் சொன்னக்காற் போமோ சொல்லு
கோனென்ற குருவருளால் சமாதி கூட்டிக்
          குவிந்துநின்று மவுனத்தின் நிலையைப் பற்றி
ஊனென்ற வுடம்பைவிட்டே அறிவாய் நின்று
          உலாவுறதே சாங்கமென்றே யுரைத்திட் டாரே.

விளக்கவுரை :
           
145. உரைத்திட்ட காரமென்ன பிருதிவி போக்கு
          ஓடுகிற வாசியினால் யோகம் பார்த்து
மறைத்திட்ட மவுனத்துடன் மவுன மூட்டி
          மருவியந்த வறிவோடே வாச மாகி          
நிறைந்திட்ட அகண்டமுத்தி சென்றே ஆடி
     நேரான அண்டமுதற் புவனம் பார்த்து
முறைத்திட்டந் தப்பாமற் சமாதி நின்றால்
     முழுயோகி முழுஞான முமூட்சா வாயே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal