சட்டை முனி சித்தர் பாடல்கள் 151 - 155 of 203 பாடல்கள்
151. பாரப்பா பிரமமது சுபாவ மாகப்
பரவியது நிரந்தரமுஞ் சரித்தா லன்று
நேரப்பா பிரமசரிய மிதுவாங் கண்டால்
நிரந்தரமுந் தயவினுடை நினைவு கேளு
தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கிச்
சகலசனம் நம்மைபோ லென்றே யெண்ணி
ஆரப்பா சுபானுபவ போதஞ் செய்வார்
அவரல்லோ தயவுடையோ ரறிந்து காணே.
விளக்கவுரை :
152. காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை
கரைகற்ற சமயம்பொய் யென்று தள்ளி
ஆணப்பா திடப்பட்டாடட் சேப மென்பார்
வீட்சணமுஞ் சீதளமுஞ் சுகதுக் கத்தால்
வீணப்பா மானாபி மானம் வந்து
வெறும்வெளிபோற் சொப்பனமா மென்று தள்ளித்
தோணப்பா தாங்காம லகண்டத் துள்ளே
சொக்குவது சமயமென்று சொல்ல லாமே.
விளக்கவுரை :
153. சொல்லலாம் வேதாந்தத் துள்ளே முத்தி
தொடுகுறியாஞ் சாத்திரத்தின் முத்தி யில்லை
வெல்லலா மதனாலே சொன்ன வெல்லாம்
வேறில்லை நாமதுதான் எனலே முத்தி
அல்லெலாஞ் சொப்பனம்போ லவத்தை யாண்டு
அகிலபிர பஞ்சமெல்லா மடுத்து மூழ்கி
நில்லலா மற்புதமாய் நிற்பிட மற்று
நிர்மலமாய் நிற்கிறபூ ரணந்தா னென்னே.
விளக்கவுரை :
154. தானென்ற பூரணந்தான் நாமென் றெண்ணிச்
சதாநித்தம் மறவாம லிருந்தா னாகில்
வானென்ற கலிதகரி யாச்சு தாச்சு
மருவியதோர் சாத்திரத்தி னாலே யப்பா
கோனென்ற தன்னிடத்தே யொன்று மில்லை
கூடிநின்று போனதில்லை யென்றே யெண்ணி
வேனென்ற நிர்க்குணமும் வேறொன் றில்லை
வேதாந்தசித் தாந்தமென்றார் கௌச மாச்சே.
விளக்கவுரை :
155. ஆச்சப்பா நேமத்தைச் சொல்லக் கேளு
அறைகுவேன் நன்றாகப் பூர ணந்தான்
வாச்சப்பா சத்யமென்ன மித்தை யென்ன
மருவியதோர் நானேதான் என்ற தாரு
வீச்சப்பா நமக்குவந்த பந்த மேது
வேதாந்த சாத்திரத்தில் விளங்கப் பார்த்துக்
கூச்சப்பா திடப்பட்டார் தவசென் பார்கள்
குலாமரிட்ட விடவெல்லாங் குருட்டு நோக்கே.
விளக்கவுரை :
சட்டை முனி சித்தர் பாடல்கள் 151 - 155 of 203 பாடல்கள்
சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal