சட்டை முனி சித்தர் பாடல்கள் 156 - 160 of 203 பாடல்கள்
156. நோக்கப்பா பிரமமதி லோகத் துள்ளே
நுகர்ந்துநின்ற காமியத்தை நரகென் றெண்ணி
வாக்கான வெறுப்பதுசொப் பனம்போ லெண்ணி
மசகமிது வென்றுதள்ளி மனமீ தேறித்
தாக்கான பொருளல்லோ சச்சிதா னந்தம்
தடைபெறவே தானானார் சந்தோட மாச்சு
போக்கான வேதாந்தப் பிரம சாரம்
புகட்டுகிற குருச்சொல்பூ ரணமென் றெண்ணே.
விளக்கவுரை :
157. எண்ணியதோர் மூன்றையுந்தா னுண்மை யென்றே
எண்ணியிருக் கிறதாரென் றியம்பு வார்கள்
தண்ணியதோர் குருவுரைத்த வுபதே சத்தைத்
தானறிந்து பூரணமாய் முத்த னாகிப்
பண்ணியதோ ரபராதம் குருவுக் கீந்து
பராபரத்தைத் தன்தேகம் போலே யெண்ணி
அண்ணியதோர் சுகமுடனே துக்க மெல்லாம்
ஆர்செய்துந் தனக்குவரம் போலுங் காணே.
விளக்கவுரை :
158. காணப்பா விப்படியே தீர்த்தி யானால்
கைகடந்த சிவபூசை யென்று சொல்வார்
வீணப்பா சகலநூ லென்று தள்ளி
விரைந்து நின்ற விரத்தியெல்லாம் விட்டே யோடி
ஊணப்பா குருபிறகே நிழலைப் போலே
உத்தமனே சச்சிதா னந்த னானாய்
ஆணப்பா தேவிக்குப சரித்து வென்று
அறிகிறதே சிரவணமென் றறிந்து கொள்ளே.
விளக்கவுரை :
159. அறிந்திந்த வேதநிலை விட்டு நீயும்
அப்பனே வாசனைப்ர பஞ்சந் தாண்டி
மறிந்திந்த புத்ராதி பாசத் தாலே
மாயம்வந்து முட்டையிலே கலச்சை யாக்கிச்
செறிந்தவதை யடிச்சகவே தாந்தம் பார்த்துச்
சீராக நிற்கிறதே செம்மை யாகும்
நெறிந்து நின்ற வேதாந்தப் பிரமந் தன்னில்
நினைவோடு வருகிறதே யாசை தானே.
விளக்கவுரை :
160. ஆசையென்றும் மதியென்றும் அதற்கு நாமம்
அப்பனே தாம்பிரம மென்றே ஆசான்
நேசையென்ற வுபதேசப் படியே யென்றும்
நேராக வேதாந்தப் பொருளென் றெண்ணிப்
பூசையென்று மற்றதெல்லாந் தள்ளி விட்டால்
உத்தமனே சிவமென்று சொல்லு வார்கள்
காசையென்றே என்னென்ன கார்யம் வந்தும்
கைவிட்ட துக்கம்வந்துங் கலங்கி டாரே.
விளக்கவுரை :
சட்டை முனி சித்தர் பாடல்கள் 156 - 160 of 203 பாடல்கள்
சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal