சட்டை முனி சித்தர் பாடல்கள் 126 - 130 of 203 பாடல்கள்

சட்டை முனி சித்தர் பாடல்கள்  126 - 130 of 203 பாடல்கள்

126. காணப்பா ரிஷியாட்டுஞ் சித்த ராட்டுங்
          காரணமாய் மவுனத்தே நின்றோ ராட்டும்
பூணப்பா பூரணத்தே நின்றோ ராட்டும்
          பொன்னாக மரமுதலாய்ப் புகழ்ந்தோ ராட்டும்
ஓணப்பா வாசியுடைக் குதிரை யாட்டும்
          ஒன்றுமற்றுத் தன்மயமாய் நின்றோ ராட்டும்
தோணப்பா யிவையெல்லாங்கொங் கணர்க்கே யல்லால்
          சூழலகிற் சித்தருண்டோ சொல்லி டீரே.

விளக்கவுரை :
           
127. சொல்லிடமாய் ஞானமுண்டோ குளிகை யுண்டோ?
          சூட்சித்த கற்பமுண்டோ வாசி யுண்டோ?
மல்சுட்ட வாதமுண்டோ சுன்ன முண்டோ?
          மகத்தான சிக்கியுண்டோ செயநீ ருண்டோ?
வெல்லிடீர் விடமுண்டோ சாரணை யுண்டோ?
          வெவ்வேறே கூட்டுகிற குடோரி யுண்டோ?
அல்லிடீர் வேதைசகு வணந்தா னுண்டோ?
          அப்பனே பதினேழு மமைத்திட் டாரே.

விளக்கவுரை :
           
128. அமைத்தவர்முக் காண்டம்பா டியதோ ரங்கம்
          வந்தித்த பிள்ளைக்கு மறிவு தோன்றும்
அமைத்தவர் பாடினபொற் கம்பி போல
          அறிவுகெட்ட மிலேச்சருக்கும் வாதசித்தி
அமைத்தவர் சுருவெட்ட வெளிய தாக
          அங்கங்கள் மறையாமற் சொன்னார் சொன்னார்
அமைத்தவர்பாட் டுக்குநம் முடைய நூல்தான்
          அருகாக மறைப்பென்றே அறைந்திட் டாரே.

விளக்கவுரை :
           
129. அறைந்திட்டா ரைந்நூறு பிள்ளை வேண்டி
          அப்பப்பால் வெகுதெளிவு சாத்தி ரந்தான்
நிறைந்திட்ட ஆரணம் போல் வெளிய தாக
          நீங்காமற் றுறந்துவிட்டா ரருளொடு பொருளும்
குறைந்திட்ட புத்தியல்நிட் களமாம் புத்தி
          கூறாத பொருளையெல்லாங் கூறி விட்டார்
வறைந்திட்ட மவுனமெல்லாம் வெளிய தாக
          வாய்திறக்கா வித்தையெல்லாம் விளக்கி னாரே.

விளக்கவுரை :

130. விளங்கியதோர் கொங்கணரால் மூல வர்க்க
          மகத்துவந்தா னுண்டாச்சு மக்காள் மக்காள்!
விளங்கியதோர் கீர்த்தியுண்டோ வுங்க ளாலே
          வெட்டவெளிக் கப்புறத்தே செல்ல மாட்டீர்;
முளங்கியதோர் குளிகையென்ன காய சித்தி
          மூச்சற்ற விடத்திலே நோக்க மென்ன
பிளங்கியதோர் சித்தருட வர்க்க மென்ன
          பேய்மக்கள் மூவைந்து பேரிற் றானே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal