சட்டை முனி சித்தர் பாடல்கள் 186 - 190 of 203 பாடல்கள்
186. மேவுமென்கை லாயபரம் பரையா மாணா
வெகுகோடி ரிஷிகளுக்கு முபதே சித்தார்
மேவுமென்று சித்தரிலே யனேகங் கோடி
மேருவிலே யிருந்தார்க்கு முபதே சித்தார்
மேவுமென்றேன் னோடுபதி னாறு பேர்க்கு
விளங்கியவர் பதம்பிடிக்க வுபதே சித்தார்
மேவுமென்றே யெழுவருடன் திருமூ லர்க்கு
விளம்பினார் மெய்ஞ்ஞானம் விளம்பி னாரே.
விளக்கவுரை :
187. விளம்பியநா மெல்லாங்கை லாய வர்க்கம்
மேருவிலே யெடுத்தவுட லெமக்கு மக்காள்
அளம்பினதோர் சனகாதி யையர் விட்டே
அரைக்கணமும் பிரியார்க ளடியை விட்டுத்
தளம்பினதோர் கொடிக்குக்கொழு கொம்பு போலே
சதாநித்தங் காத்திருந்தோ மையா கிட்டக்
கிளம்பினதோர் பந்துபோ லனேகம் பிள்ளை
கெடியிட்டு மாட்டியங்கே கிட்டி னாரே.
விளக்கவுரை :
188. கிட்டினங்கை லாயபரம் பரையி னாலே
கேளுமாச் சரியங்கொங் கணர்தாம் சென்று
கிட்டினோ மென்று சொல்லி யீசா னத்தே
கெடியான ரசமுண்டு சட்டை போக்கிக்
கிட்டினோ மீசானந் துதித்தோ மென்று
கெடியாகத் தவசிருந்து முத்த ராகிக்
கிட்டினோ மென்றுசொல்லித் தட்சிணா மூர்த்தி
கெடியான பதம்பிடித்துப் பணித்திட் டாரே.
விளக்கவுரை :
189. பணிந்திட்ட கொங்கணரைப் பார்த்து நாதன்
பாருலகிற் பிறந்தவனிப் படிதா னானால்
பணிந்திட்ட சடம்போக்கிக் கைலாயத் தேக
மானதுதான் வெகுகடின மதிக மெத்தக்
கனிந்திட்ட கனிவாலே வீரத் தாலே
கலங்காமற் சமாதியுற்றுக் கயிலா யத்திற்
றணிந்திட்ட புத்திகொண் டிங்கே வந்தாய்
சாதகமா யொருவரையுங் கண்டி லேனே.
விளக்கவுரை :
190. கண்டிலே னாச்சரியங் குமார னேபார்
கலந்தநற் சென்மமிவர் கைலாய மானார்
ஒண்டிலே நாலதுக்கு மகத்வ மென்ன
உற்றசிவ விந்துவிலப் படிதா னாச்சு;
கண்டிலே னிவரைப்போற் சித்தர் காணேன்
காரணமா யிவனுக்குத் தீட்சிப் பேனான்
பண்டிலேன் கொங்கணரே மயங்க வேண்டா
பரம்பரமாய் வயதுதந்த மௌனந் தானே.
விளக்கவுரை :
சட்டை முனி சித்தர் பாடல்கள் 186 - 190 of 203 பாடல்கள்
சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal