சட்டை முனி சித்தர் பாடல்கள் 136 - 140 of 203 பாடல்கள்
136. பிள்ளையென்றா லவரல்லோ போக ருக்குப்
புகழான ரிஷிகளெல்லாஞ் சித்த ரென்பார்
தள்ளையென்றா லவர்தாமூ லரிடம் போன
சச்சிதா னந்தவின்ப மான பிள்ளை
கொள்ளையென்றா லவர் கொள்ளை ஞான வீதி
கொடிதான சிலம்பொலியைக் கேட்டு மீண்டார்
பிள்ளையென்று வந்ததனால் கீர்த்தி யாச்சு
வேதாந்த அந்தமெல்லாம் வெளியாய்ப் போச்சே.
விளக்கவுரை :
137. போச்சென்று சொல்வதென்ன போய்வா னையா
புத்தி சொன்ன புத்தியெல்லாம் போட்டிட் டாயோ?
வாச்சென்று நின்வயிற்றிற் பிறந்த பிள்ளை
வந்தாலென் கெட்டாலென் மகத்வ முண்டோ?
கோச்சென்ற நாவமென்ன விடிந்தா லென்ன
கோடிரவி காந்தியென்ன பயமுண் டாமோ?
ஓச்சென்ற சிலம்பொலியைக் கண்டு வாரேன்
ஒருமனமாய்ப் பூரணத்தி லுன்னி டீரே.
விளக்கவுரை :
138. உன்னிடீர் அண்டமுதற் புவனந் தாண்டி
ஒரு நொடிக்குட் பதந்தாண்டி முப்பாழ் தாண்டி
மன்னுதிரு வருள்மனையைக் கண்டு போற்றி
மருவியதோர் புரணத்திற் சென்றே யேறிப்
பன்னிடுவீர் தினந்தோறும் பழக்க மையா
பாயுடனே யதுநடந்து வரைக ளாறும்
தன்னிடிர்யோ கறியேனும் அருளாற் போறேன்
தயாநிதியே கடாட்சித்தே அனுப்பு வீரே.
விளக்கவுரை :
139. அனுப்புவது பிறகுனையான் சென்று வாரேன்
அவ்வளவுங் குகைக்குள் நீ பட்ட மாய்நில்
தனுப்பிறந்த தளிபோலச் சென்று தாண்டிச்
சாதகமாய்ச் சொருபமணி மூன்றுங் காட்டிச்
கணுப்பிறந்த கமலியது பூண்டுங் காட்டிக்
காட்டிலே யட்டமாசித் தியினால் காட்டி
உணுப்பிறந்தோர் தாண்டிலொரு வரையி லேறி
உற்றுமறு வரைதனி லோடி னேனே.
விளக்கவுரை :
140. ஓடினேன் மூவரையி லிடியோ கோடி
ஓகோகோ ரவிகோடி வன்னி கோடி
வாடினேன் மனமிளைத்தேன் மயக்க மானேன்
வாயிட்ட குளிகைசென்றே யேறிப் போறேன்
நாடினேன் கற்பமொன்று மூவரையிற் றாண்டி
நலமாக நாலுவரைக் குள்ளே சென்றேன்
ஆடினே னாடினே னறிவு கெட்டேன்
அரகரா மோசமென்றே யிறங்கி னேனே.
விளக்கவுரை :
சட்டை முனி சித்தர் பாடல்கள் 136 - 140 of 203 பாடல்கள்
சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal