காகபுசுண்டர் ஞானம் 1 - 5 of 79 பாடல்கள்

காகபுசுண்டர் ஞானம் 1 - 5 of 79 பாடல்கள்


காப்பு

எண்சீர் விருத்தம்


1. சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்
    தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்
பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
    பல்லாயிரங் கோடி அண்டம் படைத்த போதம்
வரம்பெருகி யனந்தனந்தம் உயிரு மாகி
    மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
    சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே.

விளக்கவுரை :

2. ஓமென்ற சுழுனையடா அண்ட வுச்சி
    ஓமுடிந்த பட்டணத்துக் கப்பாற் சென்று
நாமென்று சொல்லற்று யோக ஞானம்
    நாட்டுகிறேன் அஞ்சனமுந் திலதப் போக்கும்
வாமென்ற வயித்தியமும் அட்ட கர்மம்
    வாதமென்ற வித்தையெல்லாந் தெளிவ தாகக்
காமென்ற வீடமதிற் கண்டு தேறிக்
    காட்டுகிறேன் மெய்ஞ்ஞானக் கருவைப் பாரே.

விளக்கவுரை :


3. பாரேநீ யோகமென்ற வழியைச் சொல்வேன்;
    பத்தடா ஐம்புலனைப் பரத்தி னூடே
சீரொருவர் தெரியாமல் மதங்கள் பேசித்
    திருவான வுச்சியிலே சேரா மற்றான்
ஆரொருவன் ஆதாரம் வெவ்வே றென்றே
    அடுக்கடுக்காய்ப் பன்னிரண்டு தலங்க ளென்று
வீரேதான் பேசியே மெலிந்து போவான்.
    விடமுண்ட அண்டமதை விரும்பிக் காணே.

விளக்கவுரை :

4. காணப்பா தலமெல்லாம் அண்ட வுச்சி
    கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று
பூணப்பா மனத்தையுந்தான் பிசகொட் டாமற்
    பூட்டடா பிரமத்திற் புகுந்தெந் நாளும்
வீணப்பா மந்திரங்க ளொன்று மில்லை
    விதியில்லை மதியில்லை கெதியு மில்லை
தோணப்பா தோணுமடா மனமொன் றான
    சுத்தமுடன் நீயிருந்து தவஞ்செய் வாயே.

விளக்கவுரை :

5. செய்யப்பா வாசிமுனி மகனே கேளு
    தீர்க்கமுடன் முன்னுரைத்த ஆயி ரத்தில்
மெய்யப்பா சரக்குநீத் துவகை யெல்லாம்
    மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கி னங்கள்
பொய்யப்பா சொல்லவில்லை ரத்னப் போக்குப்
    புனிதமுடன் சரியாகச் சொல்லிப் போட்டேன்
வையப்பா இந்நூலில் மவுன மெல்லாம்
    வகையாகச் சொல்லுகிறேன் பணிந்து கேளே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் ஞானம், kakapusundar, kakapusundar gnanam, siththarkal