காகபுசுண்டர் ஞானம் 71 - 75 of 79 பாடல்கள்

காகபுசுண்டர் ஞானம் 71 - 75 of 79 பாடல்கள்

     
71. பாரடா வாணியுந்தா னிருந்த வீடு
    பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க் கேளாய்;
ஆரடா அண்ணாக்கின் கொடியி னூடே
    அண்டத்தைப் பற்றியடா விழுது போலே
நேரடா நரம்பது தான் பொருந்தி நிற்கும்
    நிலையான அக்கினியின் மத்தி தன்னில்
வீரடா அதுவழியே அருள்தான் பாய்ந்து
    விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வாளே.

விளக்கவுரை :

72. சொல்லுவா ளனந்தமறை வேத மெல்லாம்
    சுருதியடா முடிந்தெழுந்த பிரமத் தாலே
வெல்லுவார் தனையறிந்த பெரியோ ரெல்லாம்
    வீறாண்மை பேசார்கள் மவுன மாகி
அல்லுபக லற்றதொரு பிரமந் தன்னை
    ஆரறிவா ருலகத்தி லையா பாரு
சொல்லடங்கு மிடந்தனையுங் கண்டு தேறிச்
    சூத்திரமாய்க் கல்லுப்பு வாங்கு வாங்கு.

விளக்கவுரை :
    
73. வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து
    வளமாக வப்பிலையும் பிசறு மைந்தா!
தாங்கியே திருகுகள்ளிக் குள்ளே வைத்துத்
    தமர்வாயைத் தான்மூடிச் சாபந் தீர்த்தே
ஓங்கியே திங்களுந்தான் மூன்று சென்றால்
    உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு
சாங்கமினிச் செய்யாமற் சீலை மண்ணுஞ்
    சத்தியமாய்ச் செய்தபின்னே உலர்த்திப் பாரே.

விளக்கவுரை :
    
74. பாரப்பா வுலர்ந்த தன்பின் எடுத்து மைந்தா!
    பக்தியுடன் கசபுடத்திற் போட்டுப் பாராய்
ஆரப்பா ஆறவைத்தே யெடுக்கும் போதில்
    அருணனிறம் போலிருக்குஞ் செந்தூ ரந்தான்
நேரப்பா அணுப்போலே சரக்குக் கெல்லாம்
    நிச்சயமாய்ப் பூசியுந்தான் புடத்திற் போடு
வீரப்பா நீருமடா நவலோ கந்தான்
    வேதையென்ற வித்தையெல்லாங் கைக்குள் ளாச்சே.

விளக்கவுரை :
    
75. ஆச்சடா வுடம்பிலுள்ள வியாதி யெல்லாம்
    அணுப்போல வுண்டிடவே பறந்து போகும்;
வாச்சடா தேகசித்தி யதிக மாச்சு
    வத்துடனே கூடியுந்தான் வாழ லாச்சு;
மூச்சுடா தலைப்பிண்டங் கொடியு மாவும்
    முத்தியடா வாங்கியபின் தயிலம் வாங்கி
ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே
    இன்பமுடன் வத்துவையும் பூசை செய்யே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் ஞானம், kakapusundar, kakapusundar gnanam, siththarkal