காகபுசுண்டர் ஞானம் 16 - 20 of 79 பாடல்கள்

காகபுசுண்டர் ஞானம் 16 - 20 of 79 பாடல்கள்


16. தானென்ற கற்பமடா மதுவுண் டக்கால்
    சஞ்சார சமாதியென்ப ததற்குப் பேரு
ஊனென்ற பசிதீரும் கோபம் போகும்.
    உதயகிரி தனிற்சென்றூ டுருவிப் பார்க்கத்
தேனென்ற திரையேழுந் தீய்ந்து போகுந்
    திரிவாரே உச்சிநடுச் சென்ற போது
கோனென்ற கருவியெல்லா மொடுங்கிப் போகுங்
    கூற்றுவனா ராட்டமதைப் பார்க்கலாமே.

விளக்கவுரை :    
17. பார்க்கலாம் ஒருகாலை உயரத் தூக்கிப்
    பாடுவா னொருகாலைத் தாழ விட்டே
ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய்
    என்மகனே மதியென்ப ததற்குப் பேரு
கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா
    கண்டுபார் ரவியென்று கருத லாகும்
மார்க்கமுடன் அண்டவுச்சி மேலே தானும்
    மகத்தான வன்னியிருப் பிடந்தான் பாரே.

விளக்கவுரை :
    
18. பாரப்பா இதையறியார் சித்தர் கூடிப்
    பார்தனிலே அறுபத்து நாலு யோகம்
ஆரப்பா இருக்குமென்று வெவ்வே றாக
    அலைந்தலைந்து கெட்டவர்க ளனந்தங் கோடி
நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து
    நிலையறிந்து கண்டவனே கோடிக் கொன்று
வீரப்பா பேசாமல் மனக்கண் ணாலே
    விந்துவடா பாய்ந்ததலம் வெளியைக் காணே.

விளக்கவுரை :
    
19. காணாத காட்சியெல்லாங் கண்ணிற் கண்டு
    காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்
தோணாமல் நானலைந்து சிறிது காலம்
    துருவமென்ற பிரமத்தை யடுத்துக்கேட்க
நாணாமல் அண்டவுச்சி தன்னி லேதான்
    நாடியே மனத்தாலே நாட்ட மாகக்
கோணாமல் பாருமென்றே எனக்குச் சொல்லக்
    கூசாமல் மனமொன்றா யிருத்தி னேனே.

விளக்கவுரை :

20. இருத்தியே இருதயத்தில் மனமொன் றாக
    சுகபர மாம்பொருளை யிருத்தி யொன்றாய்
நிருத்தியே வெகுகோடி கால மட்டும்
    நிருவிகற்பச் சமாதியிலே நிறைந்தெந் நாளும்
பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்கப்
    பூலோக மெங்கு மொன்றாய் நிறைந்தென் மைந்தா!
கருத்தொன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கிக்
    காரணத்தைக் கண்டுவிளை யாடுவாயே.   

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் ஞானம், kakapusundar, kakapusundar gnanam, siththarkal