காகபுசுண்டர் காவியம் 21 - 25 of 33 பாடல்கள்
21. கவிழ்ந்துபோ மப்போது அடியே னங்கே
கருத்துவைத்துத் தியானமொரு தியான முண்டு
தவழ்ந்துபோங் காலமப்போ நிறுத்து வேன்யான்
சமையமதி லக்கினிபோல் தம்பங் காணுஞ்
சிவந்தவண்ணம் நீலவுருச் சுடாவிட் டேகும்;
சிவ சிவா அக்கினிபோற் கொழுந்து வீசும்;
நவந்துஅத னருகேதான் சென்று நிற்பேன்;
நகரமுத லஞ்செழுத்தும் வரக்காண் பேனே.
விளக்கவுரை :
22. காண்பேனே நாகரமது மகாரம் புக்கும்
கருத்தான மகாரமது சிகாரம் புக்கும்
தேண்பேனே சிகாரமது வகாரம் புக்கும்
சிவசிவா வகாரமது யகாரம் புக்கும்
கோண்பேனே யகாரமது சுடரிற் புக்கும்
குருவான சுடரோடி மணியிற் புக்கும்
நாண்பான மணியோடிப் பரத்திற் புக்கும்
நற்பரந்தான் சிவம்புக்குஞ் சிவத்தைக் கேளே.
விளக்கவுரை :
23. கேளப்பா சிவமோடி அண்டம் பாயும்
கிருபையா யண்டமது திரும்பிப் பாயும்
கோளப்பா அண்டமது கம்பத் தூண் தான்
குருவான தசதீட்சை யொன்று மாச்சு
மீளப்பா தம்பமது விளங்கு மஞ் செய்கை
மேலுமில்லை கீழுமில்லை யாதுங் காணேன்;
ஆளப்பா நரைத்தமா டேறு வோனே!
அன்றளவோ வின்றளவோ அறிந்தி லேனே.
விளக்கவுரை :
24. அறிந்திலே னென்றுரைத்த புசுண்ட மூர்த்தி!
அரகரா உன்போல முனியார் காணேன்;
தெரிந்திலே னென்றுரைத்தார் மனங்கே ளாது
சிவனயந்து கேட்கவும்நீ யொளிக்க வேண்டா;
பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை
பூரணத்தா லுள்ளபடி புகழ்ந்து சொல்லும்
பரிந்திலேன் மிகப்பரிந்து கேட்டே னையா!
பழமுனியே கிழமுனியே பயன்செய் வாயே.
விளக்கவுரை :
25. பழமுனிவ னென்றுரைத்தீர் கடவு ளாரே!
பருந்தீபதம்பத்தைப் பலுக்கக் கேளும்;
குழுவுடனே தம்பமதில் யானும் போவேன்
கோகோகோ சக்கரமும் புரண்டு போகும்;
தழும்பணியச் சாகரங்க ளெங்குந் தானாய்ச்
சத்தசா கரம்புரண்டே யெங்கும் பாழாய்
அழகுடைய மாதொருத்தி தம்பத் துள்ளாய்
அரகரா கண்ணாடி லீலை தானே.
விளக்கவுரை :
காகபுசுண்டர் காவியம் 21 - 25 of 33 பாடல்கள்
காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் காவியம், kakapusundar, kakapusundar kaviyam, siththarkal