காகபுசுண்டர் ஞானம் 66 - 70 of 79 பாடல்கள்

காகபுசுண்டர் ஞானம் 66 - 70 of 79 பாடல்கள்

     
66. காணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை;
    கருத்துடனே என்குலஞ்சுக் குலந்தான் மைந்தா!
தோணப்பா தோணாமற் சாதி பேதஞ்
    சொல்லுவான் சுருக்கமாய், சுருண்டு போவான்;
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம்
    வீரமுடன் பிறந்ததடா உயிர்க ளெல்லாம்;
நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே;
    நன்றாக வுதித்தவிடம் நாடி னேனே.

விளக்கவுரை :
    
67. நாடியே யுதித்தவிடம் அறியாத் தோஷம்
    நடுவாக வந்தவிடம் பாரத் தோஷம்
கூடியே பிறந்தவிடங் காணாத் தோஷம்
    குருபரனை நிந்தனைகள் செய்த தோஷம்
வாடியே வத்தோடே சேராத் தோஷம்
    வம்பரோ டிணங்கியே திரிந்த தோஷம்
கூடியே வுறவற்றே யிருந்த தோஷம்
    கும்பியுங்கற் சிப்பியையும் அறியான் பாவி.

விளக்கவுரை :

68. அறியாத பாவிக்கு ஞான மேது?
    ஆறுமுகன் சொன்னதொரு நூலைப் பாரு;
பரிபாஷை யாகவுந்தான் சொல்ல வில்லை;
    பராக்கிரமம் என்னுடைய நூலைப் பாரு;
விரிவாகச் சித்தர்சொன்ன நூலை யெல்லாம்
    வீணாக மறைப்பாகச் சொன்னா ரையா!
குறியான அண்டமதை யொளித்தே விட்டார்
    கூறினார் வெவ்வேறாய்க் குற்றந் தானே.

விளக்கவுரை :
    
69. குற்றமது வையாமல் அண்டத் தேகிக்
    கூறாத மந்திரத்தின் குறியைப் பார்த்துச்
சித்தமொன்றாய் அந்திசந்தி யுச்சிக் காலம்
    தேவனுக்குப் பூசைசெய்து தெளிவு பெற்றுக்
குற்றமது வையாமல் மனமன் பாலே
    குருபரனை நோக்கியடா தவமே செய்து
பற்றாசை வைத்துமிகப் பார்க்கும் போது
    பராபரையுங் கைவசமே யாகு வாளே.

விளக்கவுரை :
    
70. ஆகுவா ளந்திசந்தி யுச்சி யென்றால்
    அப்பனே ரவிமதியுஞ் சுடர்மூன் றாகும்
ஏகுவாய் மூன்றுமொன்றாய்ப் பின்ன லாகி
    இருந்திடமே பிரமாண்ட நிலைய தாகும்;
போகுமே நீ செய்த காமமெல் லாம்
    புவனைதிரி சூலிகையுடைக் கிருபை யாலே;
வாகுமே வழியோடே சேர்த்தா யானால்
    வாணியுந்தான் நாவில்நடஞ் செய்வாள் பாரே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் ஞானம், kakapusundar, kakapusundar gnanam, siththarkal