பட்டினச் சித்தர் ஞானம் 21 - 25 of 101 பாடல்கள்

பட்டினச் சித்தர் ஞானம் 21 - 25 of 101 பாடல்கள்


21. பாலிக்கும் தோல் தனத்தை பாராதே மங்கையர்கள்
காலிடுக்கை நத்திக் கரையாதே - கோலெடுத்து   
வீர மறலி இவருமுன் வினையறுக்கும்
பார வழிஇன்னருளைப்பார்.

விளக்கவுரை :


22. பார்த்த இடமெல்லாம் பரமென் றிருமனமே
காற்றனல் மண்நீர் வெளியாம் கண்டவெல்லாம் - மாத்திரண்ட
ஐம்புலனு நில்லா ஆசைகளும் நில்லாவே
என்புடலும் நில்லாது இனி.

விளக்கவுரை :

23. இனியசுகம் ஐம்புலனென்று எண்ணாதே நெஞ்சே
இனிய சுகமற வாதே - இனியசுகம்
கண்டதெல்லா மெவ்வுலகு காணாத இவ்வுலகில்
நின்றதோ நில்லாததா.

விளக்கவுரை :


24. நில்லாமல் ஓடுகின்ற நெஞ்சே நிலையில்லா
எல்லாம் பகையா யிருக்குங்காண் - பொல்லாக்
கருக்குழியிலே பிறந்த கன்மவினை யானால்
திருக்கறுக்க வேணும் தினம்.

விளக்கவுரை :


25. தினந்தினைப் போதாகிலுந்தான் தீதறநில் லாமல்
இனம்பிரிந்த மான்போல் இருந்தாய் - தினந்தினமும்
ஓங்காரத் துள்ளொளியை உற்றுணர்ந்த நீமனமே
ஆங்கார அச்சம் அறு.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் ஞானம், pattina siththar, pattina siththar gnanam, siththarkal