காகபுசுண்டர் ஞானம் 36 - 40 of 79 பாடல்கள்

காகபுசுண்டர் ஞானம் 36 - 40 of 79 பாடல்கள்


36. வானென்ற அண்டமதிற் சென்று புக்கு
    வடவரையி லுச்சிநடுத் தீபங் கண்டு
தேனென்ற சுத்தசிவ கங்கை தன்னில்
    தீர்த்தங்க ளாடித்திரு நாம மிட்டுக்
கோனென்ற மனமன்பாய் மலராய்ச் சார்த்திக்
    கொடியமறை வேதமுந்தா னடக்கங் கண்டு
தேனென்ற சித்தமே புத்தி யாகத்
    தெளிந்தவரே மெய்ஞ்ஞானி யாவர் பாரே.

விளக்கவுரை :
    
37. பாரண்ட மதையொன்றாய்ப் பார்க்கும் போது
    பலபேத மாயையெல்லாம் மருண்டே யோடுஞ்
சீரண்டம் அகிலாண்ட பிரமாண் டங்கள்
    செனித்தவகை யுயிர்தோறும் நீயாய் நிற்பாய்
காரண்ட லலாடக்கண் திறந்த போது
    கண்கொள்ளாக் காட்சியெல்லாங் கலந்தே காட்டும்;
வீரண்ட மேல்வட்டம் விரிந்த சக்கரம்
    மெய்ஞ்ஞான வெளியதனிற் றொடர்ந்து கூடே.

விளக்கவுரை :
    
38. கூடுவதென் குணமறிந்த மனமொன் றாகக்
    கூத்தாடித் திரியாமற் கவன மாகப்
பாடுது பலநூலைப் படித்தி டாமற்
    பராபரத்தி னுச்சிநடு வெளியே சென்றே
ஆடுவது தொந்தோமென் றாட்டைப் பார்த்தே
    அடுக்கடுக்கா யாயிரத்தெட்டிதழுங் கண்டு
வாடுகிற பயிர்களுக்கு மழைபெய் தாற்போல்
    வாடாத தீபத்தை யறிந்து பாரே.

விளக்கவுரை :

    
39. பாரென்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர்
    பராபரத்து நிலையினுடைப் பாதஞ் சொன்னீர்
வீரென்ற அண்டமெல்லாம் பாழ தாகி
    விராட பிரம மொன்றியா யிருக்கும் போது
சீரென்ற வுயிர்களெல்லா மிருப்ப தெங்கே?
    சித்தருடன் திரிமூர்த்தி யிருப்ப தெங்கே?
கூரென்று நீர்தங்கு மிடந்தா னெங்கே?
    குருபரனே! இந்தவகை கூறு வீரே.

விளக்கவுரை :

40. கூறுகிறே னென்மகனே வாசி நாதா
    குணமான வீச்சுரனார் சபையிற் கூடித்
தேறுகின்ற பிரளயமாம் காலந் தன்னிற்
    சீவசெந்து சித்தருடன் முனிவர் தாமும்
வீருடனே யெங்கேதா னிருப்பா ரென்று
    விமலருந்தான் விஷ்ணுவையும் விவரங் கேட்கக்
கார்மேக மேனியனங் கவரை நோக்கிக்
    கண்டுமிகப் பணிந்துமினிக் கருது வானே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் ஞானம், kakapusundar, kakapusundar gnanam, siththarkal