காகபுசுண்டர் ஞானம் 41 - 45 of 79 பாடல்கள்

காகபுசுண்டர் ஞானம் 41 - 45 of 79 பாடல்கள்

     
41. கருதுவான் ஆலிலைமேற் றுயில்வேன் யானும்
    கனமான சீவசெந்தும் அனந்த சித்தர்
உறுதியா யென்றனுடைக் கமலந் தன்னில்
    ஒடுங்குவா ராதரித்து மிகவே நிற்பேன்.
வருதியாய்ப் புசுண்டருந்தான் வருவா ரென்று
    வலவனுடன் மாலானும் உரைக்கும் போது
சுருதியா யெனையழைத்தே சிவன்றான் கேட்கச்
    சூத்திரமாய் நல்வசனம் மொழிந்தேன் பாரே.

விளக்கவுரை :
    
42. பாரென்று சிவனுடைய முகத்தைப் பார்த்துப்
    பல்லாயிரங் கோடியண்ட வுயிர்க ளெல்லாஞ்
சீரென்ற சித்தருடன் முனிவர் தாமுந்
    திருமாலும் ஆலிலைமேற் றுயிலும் போது
கூரென்ற வுந்தியிடக் கமலந் தன்னிற்
    கூடியே அடைந்திருப்பார் குணம தாக
வீரென்ற ஐவரையும் தாண்டி யப்பால்
    வெகுசுருக்காய் வீதிவழி வந்தேன் பாரே.

விளக்கவுரை :
    
43. பாரப்பா ஆகாயஞ் செல்லும் போது
    பாலகனே சக்கரந்தான் சுற்றி யாட
ஆரப்பா சக்கரத்தைப் பிசகொட் டாமல்
    அதன்மேல் யேறியுந்தா னப்பாற் சென்றேன்;
நேரப்பா நெடுந்தூரம் போகும் போது
    நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்;
வீரப்பா அக்கினிபோல் படர்ந்து நிற்கும்
    வெளியொன்றுந் தெரியாம லிருக்குந் தானே.

விளக்கவுரை :

44. இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
    என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா!
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்;
    ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது
பெருக்கமுடன் முன்பார்த்தாற் புருட ரூபம்
    புத்திரனே பின்பார்த்தாற் பெண்போல் ரூபம்
மருக்கமுடன் யான்றானுங் கம்பத் தூடே
    வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே.

விளக்கவுரை :
    
45. பாரப்பா இப்படியே அனந்த காலம்
    பராபரத்தி னூடேதா னிருந்து வாழ்ந்தேன்;
ஆரப்பா பிரமமுந்தான் மனமிரங்கி
    அகண்டமதைப் படைப்பதற்கே அருளும் போதும்
வீரப்பா கம்பத்தி லிருந்த பெண்ணும்
    விமலரென்றும் உமையென்றும் மிகவே தோன்றிச்
சீரப்பா சக்கரத்தி லிருந்து கொண்டு
    திருமாலைத் தானழைக்கத் தீர்க்கம் பாரே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் ஞானம், kakapusundar, kakapusundar gnanam, siththarkal