காகபுசுண்டர் உபநிடதம் 1 - 5 of 31 பாடல்கள்

காகபுசுண்டர் உபநிடதம் 1 - 5 of 31 பாடல்கள்


காப்பு

எண்சீர் விருத்தம்


ஆதியெனை யீன்ற குரு பாதங் காப்பு;
    அத்துவிதம் பிரணவத்தி னருளே காப்பு;
நீதியா மாரூட ஞானம் பெற்ற
    நிர்மலமாஞ் சித்தருடைப் பாதங் காப்பு;
சோதியெனப் பாடிவைத்தேன் முப்பத் தொன்றிற்
    துரியாதீ தப்பொருளைத் துலக்க மாகத்
தீதில்லாக் குணமுடைய பிள்ளை யானார்
    சீவேச ஐக்யமது தெரியுந் தானே.
   
விளக்கவுரை :
    
நூல்


1. தானென்ற குருவினுப தேசத் தாலே
    தனுகரண அவித்தை யெல்லாந் தவறுண்டேபோம்;
வானென்ற சுவானுபவ ஞான முண்டாம்;
    மவுனாதி யோகத்தின் வாழ்க்கை யெய்தும்;
நானென்ற பிரபஞ்ச வுற்பத் திக்கு
    நாதாநீ தக்யானம் நன்றா யெய்தும்;
கோனென்ற கொங்கணவர் தமக்குச் சொன்ன
    குறிப்பான யோகமிதைக் கூர்ந்து பாரே.

விளக்கவுரை :

2. பாருநீ பிரமநிலை யார்தான் சொல்வார்?
    பதமில்லை யாதெனினும் பவ்ய மில்லை
சேருமிந்தப் பிரமாணந் தானு ணர்ந்து
    தெரிவிக்கப் படாதருளிற் சிவசொ ரூபம்;
ஊருகீன்ற காலத்ர யங்க ளாலே
    உபாதிக்கப் பர தத்வ முற்பத் திக்கும்
சாருமிந்த வுபாதான காரணத்தின்
    சம்பந்த மில்லாத சாட்சிதானே.

விளக்கவுரை :

    
3. சாட்சிசத்தா யதீதகுணா தீத மாகிச்
    சட்சுமனத் தாலறியத் தகாது யாதும்   
சாட்சியதே யேதுசா தனமுந் தள்ளிச்
    சகலவந்தர் யாமித்வ சர்வ பூத
சாட்சியினை யிவ்வளவவ் வளவா மென்று
    தனைக்குணித்து நிர்ணயிக்கத் தகாது யோகம்
சாட்சியதே ஞாதுர்ஞான ஞேய ரூபஞ்
    சத்தாதி பிரமாதி தானே சொல்வாம்.

விளக்கவுரை :

    
4. சொல்லுமெனக் கேட்டுகந்த மாணாக் காவுன்
    தூலகா ரணப்பிரமந் துரியா தீதம்
அல்லுமல்ல பகலுமல்ல நிட்க ளங்கம்
    அம்சோகம் அசபாமந் திரத்தி யானம்
செல்லுமவ னேநானென் றபிமா னிக்குச்
    சித்திவிர்த்தி நிரோதகமாம் யோகத் தாலே
வெல்லறிஞர் பலபோக விர்த்தி யோகி
    விவேகதியா னாதிகளே மேலாம் பிர்மம்.

விளக்கவுரை :

    
5. பிர்மசுரோத் ராதிஞானேந் திரிய மைந்தும்
    பேசுதர்க்க வாக்காதியிந் திரிய மைந்தும்
கர்மமெனுஞ் சத்தாதி விடய மைந்தும்
    கரணாதி நான்குபிரா ணாதி யைந்தும்
வர்மமிவை யிருபத்து நான்குங் கூடி
    வருந்தூல சரீரவிராட் டெனவே சொல்லும்
தர்மவத்தைச் சாக்கிரபி மானி விசுவன்
    தனக்குவமை யாங்கிரியா சத்தி தானே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் உபநிடதம், kakapusundar, kakapusundar upanidatham, siththarkal